அடிக்கடி சிறுநீர் இந்த நிறத்தில் வந்தால் அலட்சியம் வேண்டாம்.. கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்..

First Published | Feb 22, 2023, 11:49 AM IST

abnormal urine color: சிறுநீரில் நிறமாற்றம் ஏற்படுவது உடல் நல பிரச்சனைகளை குறிக்கும் என கூறப்படுகிறது. 

சிறுநீரின் நிறம் பல உடல்நல பிரச்சனைகளை குறிக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள் 'சிறுநீர் எப்படி போகுது, நிறம் என்ன?' என்பதை கேட்டு தெரிந்து கொள்வார்கள். சில நோய்கள் அல்லது பிரச்சனைகளை சிறுநீரின் நிறத்தால் அறியலாம். 

உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள், அதிகப்படியான நீரை உடல் சிறுநீராக வெளியேற்றுகிறது. உடலை விட்டு வெளியேறும் முன்னர் சிறுநீர் சிறுநீரகத்திற்கு தான் செல்கிறது. இங்கு இரத்தத்தில் இருந்து கழிவுகள் அகற்றப்படுகின்றன. பொதுவாக சிறுநீரின் நிறம் தெளிவான நீர் அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால் அது இயல்பானது. இவை அல்லாமல் வேறு எந்த நிறத்தில் இருந்தாலும் அது கவனிக்கக் கூடிய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறுநீரின் நிறத்தின் அர்த்தங்களை இங்கு காணலாம்.  

Tap to resize

அடர் மஞ்சள் நிறமாக சிறுநீர் வெளியேறினால் உடல் நீரிழப்பு பிரச்சனையோடு போராடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த நிறம் மாற அதிக நீர் குடிக்க வேண்டும். அதன் பிறகு மாற்றம் தெரியும். அப்படி மாறாவிட்டால் அது சர்க்கரை நோய், சிறுநீரக நோய் அறிகுறியாக இருக்கலாம். சிவப்பு நிறத்தில் சிறுநீர் வந்தால் புற்றுநோயைக் குறிக்கிறது. 

இதையும் படிங்க: தினமும் ஒரு கப் தயிர்.. அட நீண்ட நாட்கள் வாழ சுலபமான டிப்ஸ் கூட இருக்கா? சூப்பர் மந்திரங்கள் இதோ...

உங்களுடைய பித்தப்பையில் தொற்று வந்தால், சிறுநீரின் நிறம் மாறும். அப்போது பழுப்பு நிறமாக சிறுநீர் மாறும். சிறுநீர்ப்பையில் ஏதேனும் காயம் அல்லது அடைப்பு ஏற்பட்டாலும் அந்த நிறம் இருக்கும். இப்படி ஏற்பட்டால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். சூடோமோனாஸ் ஏருகினோசா பாக்டீரியாவின் தொற்று ஏற்பட்டால் சிறுநீர் நீலம், பச்சை அல்லது ஊதா ஆகிய நிறத்தில் தோன்றும். நுரையுடன் சிறுநீர் வந்தால் அதில் புரதம் இருப்பதைக் குறிக்கிறது. உடலில் புரதம் அதிகமாக இருந்தாலோ, நீர் அதிகமாக இருந்தாலோ நுரை வரும். தொடர்ச்சியா வந்தால் மருத்துவரிடம் காட்ட வேண்டும். 

சிவப்பு சிறுநீர் புற்றுநோயின் அறிகுறி. இது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரக புற்றுநோயின் முதல் கட்ட அறிகுறியாக இருக்கலாம். மற்ற காரணங்கள் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளாக இருக்கலாம். தவிர, பீட்ரூட், புளுபெர்ரி ஆகியவை உட்கொள்வதால் சிறுநீர் சிவப்பு நிறமாக வெளியேறும். ரிஃபாம்பிசின் மாதிரியான மருந்துகள் சிறுநீரை இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாற்றும். மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டும். 

இதையும் படிங்க: சிறுநீரக நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்.. இல்லைன்னா கிட்னிக்கு தான் ஆபத்தாம் உஷாரா இருங்க..

Latest Videos

click me!