PCOS.. இந்த பிரச்சனை இருக்க பெண்கள் பால் அருந்த கூடாதா? நீர்க்கட்டிகள் பிரச்சனை கட்டுக்குள் வர என்ன செய்யனும்

First Published | Feb 21, 2023, 5:25 PM IST

பிசிஓஎஸ் (PCOS) எனும் பிரச்சனை உள்ள பெண்கள் பால் குடிக்கக் கூடாது என சொல்லப்படுவது உண்மையா? என்பதை இங்கு காணலாம். 

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையில் பிசிஓஎஸ் (PCOS) என்பதும் ஒன்று. ஹார்மோன் சமச்சீரின்மையால் இந்நோய் வருகிறது. இதனை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic Ovary Syndrome ) என அழைக்கிறார்கள். இந்த நோய் இருக்கும் பெண்களுக்கு சாதாரண அளவை விட அதிகமாக ஆண் ஹார்மோன்கள் உற்பத்தி ஆகும். 

இந்த நோயில் இருந்து பூரண குணமடைய தனி மருந்துகள் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள், உடற்பயிற்சியினால் நோய் தாக்கங்களை குறைக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோய் பாதிப்பு வந்தவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, முடி உதிர்தல், முகத்தில் ரோம வளர்ச்சி, முகப்பரு, கருப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் போன்ற அறிகுறிகள் காணப்படும். 

Tap to resize

பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், உணவில் சிறப்பு கவனம் செலுத்துமாறு மருத்துவர்கள் வலியுறுத்துவர். பழங்கள், பிரஷ் காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் ஓட்ஸ், தானியங்களை உணவில் சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நோய் பாதித்தவர்கள் பால் அருந்தக் கூடாது என சிலர் கூறுவது கட்டுக்கதையா உண்மையா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: தூங்க போறதுக்கு முன் இந்த 4 பொருளை சாப்பிட்டு பாருங்க..நல்ல தூக்கம் வரும்.. தைராய்டு பிரச்சனை கிட்ட கூட வராது

பிசிஓஎஸ் இருக்கும் பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அல்லது ஆண்ட்ரோஜன் அளவுகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பால் தவிர்க்கப்பட வேண்டும். பால் பொருள்களை விலக்கி வைப்பது நல்லது. இந்த நோய் பாதிக்கப்பட்ட பெண்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தும்போது, இன்சுலின், ஆண்ட்ரோஜன் அளவை அதிகரிக்கும். இதனால் உடலில் சில மாற்றங்களுக்கு காரணமாகிவிடும். ஆனாலும் பால் அருந்த நீங்கள் விரும்பினால் பாதாம் பாலை அருந்தலாம். பசும் பாலை அருந்த விரும்பினால் மிகவும் அளவாக எடுத்து கொள்ளுங்கள். ஆனால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்கிறார் நிபுணர் லோவ்னீத் பாத்ரா. 

ஆரோக்கியமான உடல் எடையை வைத்திருக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல கொழுப்பு நிறைந்த மீன், பச்சை இலைக் காய்கறிகள், தக்காளி, பெர்ரி, விதைகள், மஞ்சள், ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். புரத உணவுகளை உண்ணலாம். இது உங்களை நீண்ட காலத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். 

pcos

பிசிஓஎஸ் (PCOS) பாதிப்பு உள்ள பெண்கள் கார்பனேற்றப்பட்ட பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வறுத்த உணவுகளையும் எடுத்து கொள்ளக் கூடாது. 

இதையும் படிங்க: மறந்தும் ருத்ராட்சம் அணிந்து போக கூடாத இடங்கள்.. மீறினால் என்னாகும் தெரியுமா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்

Latest Videos

click me!