சிவனின் கண்ணில் இருந்து தான் ருத்ராட்சம் வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அணிவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ருத்ராட்சம் அணிந்து கொள்ள ருத்ராட்ச சாஸ்திரத்தின்படி சில விதிகள் உள்ளன. அதை அணியும் முன் அந்த விதிகளை தெரிந்திருக்க வேண்டும். எங்கு செல்லும்போது ருத்ராட்சம் அணியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
படுக்கையறையில் ருத்ராட்சத்தை கழட்டி கொள்ள வேண்டும் . ஏனெனில் தூங்கும் போது நமது உடல் தூய்மையற்றதாகவும், செயலற்றதாகவும் இருக்கிறது. இதனுடன் தூங்கும் போது ருத்ராட்சம் உடைந்துவிடும் என்பது காரணம்.
ஒருவரின் இறுதிசடங்கிற்கு செல்லும்போது ருத்ராட்சம் அணியக் கூடாது. இறந்தவர்களை வைத்திருக்கும் இடங்களிலும் அதை அணிவதை தவிர்க்க வேண்டும்.
இந்து சாஸ்திரங்களின்படி குழந்தை பிறந்த வீடு அசுத்தமாக கருதப்படுகிறது. அங்கேயும் ருத்ராட்சம் அணியக்கூடாது. அப்படி அணிந்தால் ருத்ராட்சம் அணிவதன் பலனே இல்லாமல் மந்தமாகிவிடும்.
எப்போது ருத்ராட்சம் அணிவது மங்களகரமானது?
அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நேரங்களில் அணிவது நல்லது. ருத்ராட்சத்தை பாலில் நனைத்து, கடுகு எண்ணெய் தடவி அணியலாம். சிவபுராணத்தின்படி, ருத்ராட்சம் பால் மற்றும் கடுகு எண்ணெய் தடவும்போது மகிமை பெறுகிறது. இந்த ஆற்றல் உடலில் இருந்து அனைத்து வகையான நோய்களையும் முழுவதும் படிப்படியாக நீக்குகிறது.