பச்சிளம் குழந்தைக்கு எமனாக மாறிய தாய்ப்பால்... இப்படியும் நடக்குமா? கேரளாவில் துயரம்..!

First Published | Feb 18, 2023, 2:56 PM IST

தாய்ப்பால் தொண்டையில் தடைப்பட்டு நின்றதால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாய்மை அற்புதமான அனுபவம். மாதக்கணக்கில் வயிற்றில் இருக்கும் அந்த சிசுவை உலகிற்கு கொண்டு வருவது அற்புதமான காரியம். ஆனால் சிறு குழந்தைகளின் ஆரோக்கியம் மெல்லிய உணர்திறன் கொண்டது. அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வைப்பது அவசியம். தாயின் தாய்ப்பால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அமுதமாக இருக்கும். அது உலகில் வேறு எந்த மருந்தும் ஈடில்லா மகத்துவம் கொண்டது. 

பிறந்த குழந்தையின் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் பாலில் காணப்படுகிறது. ஆகவே தான் பிறந்த குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் தரும் தாய்ப்பாலே அவர்களின் உயிருக்கும் சில நேரம் ஆபத்தாகிவிடுகிறது. இது நம்ப கடினமாக இருக்கும். ஆனால் அப்படியொரு சம்பவம் கேரளாவில் உள்ள காசர்கோட்டில் நடந்துள்ளது. 

Tap to resize

தாய்ப்பாலால் நேர்ந்த விபரீதம்..

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பாடியட்கா என்ற பகுதியை சேர்ந்த தம்பதி அப்துல் ரஹ்மான்-தாஹிரா. இவர்களுக்கு 25 நாட்கள் முன்னர் குழந்தை பிறந்தது. அந்த சின்னஞ்சிறிய குழந்தை தாய்ப்பாலை குடித்துக் கொண்டிருக்கும் போது, தொண்டையில் பால் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிப்ரவரி 16ஆம் தேதி குழந்தைக்கு எப்போதும் போல தாய்ப்பால் புகட்டியுள்ளார் குழந்தையின் தாய் தாஹிரா. அப்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கி, அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை பாடியட்கா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் வழிகாட்டலின்பேரில் காசர்கோடு பொது மருத்துவமனைக்கும் குழந்தையை கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் 

குழந்தைகள் சிறந்த வளர்ச்சி, ஆரோக்கியத்தை அடைய, பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு பிரசவித்த பெண் தாய்ப்பால் கொடுக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. அதன் பின்புதான் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மற்ற உணவுகள் அளிக்கப்பட வேண்டும். இரண்டு வயது அல்லது அதற்கு மேல் குழந்தைகள் விரும்பும் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சில ஆய்வுகள் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் என கூறுகின்றன. அதன் பிறகு தாய்ப்பாலுடன் வேறு சில உணவுகளையும் கொடுக்கலாம் என்று அது அறிவுறுத்துகிறது. 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஏன் நல்லது? 

தாய்ப்பாலில் 6 மாதங்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான கலோரிகள் உள்ளன. குழந்தைகள் பிறந்ததும் ஒரு குறிப்பிட்ட அளவு திரவத்தை மட்டுமே அருந்த முடியும். அவர்கள் 800 மில்லி திரவங்களை உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு ஒருநாளில் 100 மில்லி தண்ணீரைக் கொடுத்தால், அவர்கள் 100 மில்லி தாய்ப்பாலில் உள்ள கலோரிகளை இழக்கிறார்கள் என்று டாக்டர் வர்மா கூறுகிறார். 

இதையும் படிங்க: ஆசையா கேட்கும்... கணவருக்கு பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா?

Latest Videos

click me!