இன்றைய காலத்தில் அசிடிட்டி பொதுவான உடல்நலப் பிரச்சனையாகிவிட்டது. இதுவும் மற்ற நோய்களைப் போலவே அறிகுறிகளை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சல், சாப்பிட்ட உடனேயே வயிற்றில் எரிச்சல், வயிறு வலி ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறிகள். இதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள தவறினால் வயிற்று புண்கள், பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, முறையற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், காலாவதியான உணவுகள், அசுத்தமான உணவுகள், அசுத்தமான மீன் உணவுகள், காரமான மற்றும் புளிப்பு உணவுகள், மன அழுத்தம் போன்றவை அசிடிட்டிக்கு காரணமாகும். அசிடிட்டி வராமல் இருக்க சரியான நேரத்தில் சாப்பிடவேண்டும்.
காபின் அமிலத்தன்மை உடையது, இதை தவிர்ப்பது நல்லது. வறுத்த, பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இவற்றை மிகக் குறைவாக உண்ணவேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உண்ணக்கூடாது. பீன்ஸ், உருளைக்கிழங்கு கூட அமிலத்தன்மையை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்க வேண்டும்.
அசிடிட்டி வராமல் தடுக்க படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். சாப்பாட்டை மென்று உண்ண வேண்டும். அப்படி செய்யாவிட்டால் செரிமானத்தை கடினமாக்குகிறது. இதனாலும் அசிடிட்டி வரலாம். ஊறுகாயை அளவாக மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
சாப்பிட்டு முடிந்த பிறகு கிராம்பு வாயில் போட்டு மென்று தின்பது நல்லது. இது அமிலத்தன்மைக்கு எதிராக நல்ல பலன் தரும். இதை போல உணவுக்கு பின் சோம்பு கூட சாப்பிடலாம். சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துவது அசிடிட்டி வராமல் தடுக்கும், நீர் அருந்துதல் செரிமானத்தையும் மேம்படுத்தும். இது தவிர மூலிகை டீ கூட இருக்கிறது. அதன் செய்முறையை காணலாம்.