சிவனின் சிறந்த இரவையே மகா சிவராத்திரி என்கிறார்கள். அன்றைய தினம் சிவன், சக்தி திருமணம் நடந்தது என புராணம் கூறுகிறது. இந்த ஆண்டு சிவராத்திரி நாளை (பிப்.18) கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் குடும்பத்திற்கு நன்மை பயக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். அன்றைய நாளில் கைகளில் மெஹந்தி வைத்து சிறப்பாக கொண்டாடுங்கள்.
விழா காலங்களில் கைகளில் மருதாணி வைத்து கொள்வது பெண்களின் விருப்பமான விஷயம். முன்பெல்லாம் திருமணம் முதல் எல்லா விதமான விழா நாள்களிலும் மருதாணி இல்லாத கைகளை காண்பது அரிது. இப்போது கைகளில் மருதாணி வைப்பது குறைந்துவருகிறது.
தேவையான பொருள்கள்
சர்க்கரை 2 தேக்கரண்டி, டீத்தூள் 2 தேக்கரண்டி, சோம்பு 2 தேக்கரண்டி, ஆகியவை மட்டும் போதும். ஒரு பழைய பாத்திரத்தை எடுத்துக் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.
பாத்திரத்தின் உள்ளே பழைய குட்டி கிண்ணத்தை வையுங்கள். சோம்பு, சர்க்கரை, டீ தூள் ஆகியற்றை கிண்ணத்தை சுற்றியுள்ள பகுதியில் போடவேண்டும். இதை ஒரு தட்டு வைத்து மூடி கொள்ளுங்கள். இதன் மேலே ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி 10 நிமிடம் வைத்து கொள்ளுங்கள். இதனால் உள்ளேயிருக்கும் கிண்ணத்தில் நீராவி இறங்கி இருக்கும். அந்த கிண்ணத்தில் இருக்கும் சாறை கைகளில் வைத்தாலே போதும். பத்து நிமிடத்தில் கைகள் சிவந்து அழகாக இருக்கும். மகா சிவராத்திரி அன்று இந்த மாதிரி மெஹந்தி வையுங்கள்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: எப்போது கண் விழிக்க வேண்டும்? விரத ஆரம்பம் முதல் நிறைவு வரை முழுவிவரம்..!
மெஹந்தி