Matcha Tea : கர்ப்பிணிகள் மட்சா டீ குடித்தால் நன்மையா? தீமையா? முழு விளக்கம்

Published : Nov 15, 2025, 05:04 PM IST

கர்ப்பிணிகள் மட்சா டீ குடிக்கலாமா? கூடாதா? அப்படி குடித்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
14
Matcha Tea During Pregnancy

மட்சா டீ (Matcha Tea) தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. பலரும் இதை விரும்பி குடிக்கிறார்கள். குறிப்பாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் இதை தங்களது டயட்டில் எடுத்துக் கொள்கிறார்கள். மட்சா டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. காஃபைன் மிதமான அளவில் உள்ளன. இந்த மட்சா டீயை கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குடிக்கலாமா? அப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
கர்ப்ப காலத்தில் மட்சா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

- மட்சா டீயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக இதில் கேட்டசின் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் ரொம்பவே அதிகம் இருக்கிறது. இது சருமத்தின் செல்களை பாதுகாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

- உடலில் ஆற்றலை இயற்கையாகவே அதிகரிக்க மட்சா டீ உதவுகிறது. எனவே காபிக்கு மாறாக இதை குடிக்கலாம்.

- பொதுவாக கர்ப்ப காலத்தில் செரிமான செயல்பாடு மெதுவாக இருக்கும். இதனால் வயிறு வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றை தவிர்க்க மட்சா டீ பெரிதும் உதவும். ஏனெனில் மட்சா டீயில் இருக்கும் பாலிபினால்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

- கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தின் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இந்த பிரச்சனை வராமல் இருக்க கர்ப்பிணிகள் மட்சா டீ குடிக்கலாம். மட்சா டீயில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் மற்றும் கேட்டசின்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.

34
கர்ப்ப காலத்தில் மட்சா டீ குடிப்பதன் பக்க விளைவுகள் :

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மட்சா டி குடிப்பதால் நிறைய நன்மைகள் கிடைத்தாலும், சில பக்க விளைவுகளும் ஏற்படும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

- கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் மட்சா டீயை அளவுக்கு அதிகமாக குடித்தால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

- கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் அமிலம் அதிகமாக தேவைப்படும். இத்தகைய சூழ்நிலையில், கர்ப்பிணிகள் அதிகமாக மட்சா டீ குடித்தால் போலிக் அமிலம் உறிஞ்சுதல் குறையும்.

- அதுபோல கர்ப்பிணிகள் அதிகமாக மட்சா குடித்தால் இரும்புச்சத்து உறிஞ்சுதலும் குறையும்.

- மட்சா டீ கர்ப்ப காலத்தில் செரிமான ஆற்றலை மேம்படுத்துவது என்பது உண்மைதான். ஆனால் அதை அதிகமாக எடுத்துக் கொண்டால் செரிமான குறைபாட்டை ஏற்படுத்தும்.

44
மட்சா டீ தயாரிக்கும் முறை :

இதற்கு ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் மட்சா டீ பொடியை கலக்கவும். அவ்வளவுதான் மட்சா டீ தயார். இந்த டீயை கிரீன் டீயை போல அப்படியே குடிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories