Turmeric Milk Benefits : தினமும் '1' கிளாஸ் மஞ்சள் பால்.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் ஆயிரம் நன்மைகள்

Published : Nov 14, 2025, 07:13 PM IST

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
Turmeric Milk Benefits

மஞ்சள் என்பது பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு மசாலா பொருள் ஆகும். இதில் இருக்கும் குர்குமின் என்னும் கலவையானது மிகவும் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளை தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை மஞ்சள் பால் வழங்குகிறது. இப்போது இந்த பதிவில் தினமும் மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்

27
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நல்லது. ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் கொண்ட மஞ்சள் இதற்கு உதவுகிறது.

37
குடல் ஆரோக்கியம்

அஜீரணம், வாயு, வயிறு உப்புசம், அமிலத்தன்மை போன்றவற்றைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது.

47
மூளையின் ஆரோக்கியம்

மஞ்சளில் உள்ள குர்குமின் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயனளிக்கும்.

57
எலும்புகளின் ஆரோக்கியம்

பாலில் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே, பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

67
துக்கம்

இரவில் மஞ்சள் பால் குடிப்பது நல்ல உறக்கத்தைப் பெற உதவும். மஞ்சளில் உள்ள குர்குமின் இதற்கு உதவுகிறது.

77
கவனத்திற்கு:

உணவு முறையில் மாற்றம் செய்வதற்கு முன், சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.

Read more Photos on
click me!

Recommended Stories