மழைக்காலம் இதமாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தாலும் கூட சில சமயங்களில் குறிப்பாக நம் வீட்டின் கிச்சன் பகுதியில் இது சேதத்தை தான் ஏற்படுத்தக்கூடும். நம் வீட்டின் சமையலறை சுத்தமாக இருந்தால்தான் நாமும் ஆரோக்கியமாக இருப்போம். எனவே மழைக்காலத்தில் உங்கள் வீட்டின் கிச்சன் சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமல் இருக்க அதை பராமரிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
26
1. குப்பையை உடனே அகற்றி விடு!
கிச்சனில் இருக்கும் குப்பை தொட்டியில் தான் பழங்களின் தோல் காய்கறி கழிவு மற்றும் பிற உணவுகளின் கழிவுகளை கொட்டுகிறோம். இது இயல்பானது தான். ஆனால் மழைக்காலத்தில் குப்பைகளை மொத்தமாக சேமித்து கொட்டாமல் அதை அவ்வப்போது வெளியே கொட்டி விடுங்கள். இல்லையெனில் கிச்சனுக்குள் தான் புழுக்கள், பூச்சிகள், எறும்புகள் வந்து சேரும். மேலும் இவை தொற்று நோய் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
36
2. ஈரமாக வைக்காதே!
கிச்சனில் தான் நாம் அதிகமாக தண்ணீர் பயன்படுத்துகிறோம். ஆனால் மழைக்காலத்தில் கிச்சனில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கிருமிகள் பாக்டீரியாக்கள் வளர காரணமாக அமையும். மேலும் துர்நாற்றமும் அடிக்கும். பூஞ்சைகள் உருவாகும். எனவே கிச்சனில் வேலை முடிந்தவுடனே நன்கு துடைத்து விடுங்கள். ஈரமாக ஒருபோதும் வைக்காதீர்கள்.
மழைக்காலத்தில் சமையலறையை எவ்வளவுதான் துடைத்த சுத்தம் செய்து வைத்தாலும் துர்நாற்றம் வீசும், ஈரப்பதமும் இருக்கத்தான் செய்யும். அதை போக்குவதற்கு ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். அவை ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும், துர்நாற்றமும் அடிக்காது.
56
4. ஜன்னலை திறந்து வை!
பலரும் கிச்சன் ஜன்னலை எப்போதுமே மூடியே வைத்திருப்பார்கள். இதனால் சமையலறையில் சரியான காற்று சுழற்சி இருக்காமல் ஈரப்பதம் அதிகமாக ஏற்படும். பூஞ்சை காளானும் வளரும். எனவே சமையலை முடித்த பிறகு கிச்சன் ஜன்னல் மற்றும் கதவுகளை சுமார் ஒரு மணி நேரம் ஆவது திறந்து வையுங்கள்.
66
5. உணவுகளை சேமித்தல்
மழைக்காலத்தில் உணவுகள் சீக்கிரமாக கெட்டு போக வாய்ப்பு உள்ளது. எனவே சமைத்த பிறகு நீண்ட நேரம் உணவை வெளியே வைக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கவும். அதுபோல கெட்டுப்போன உணவை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.