கொரோனா தாக்கத்தில் இருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ், குரங்கு அம்மை வைரஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து தொல்லை தருகிறது. அத்துடன் மழைக்காலம் துவங்கிவிட்டதால் பல்வேறு தொற்றுநோய் பிரச்சனைகள் வந்து பெரும் தலைவலியாக மாறிவிடும்.
இந்தக் காலகட்டத்தில் உடல் மிகவும் பலவீனமடைந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவது தான். இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தாங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் முக்கிய உணவு பொருட்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.