செய்முறை விளக்கம்:
1. அடி கனமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, முதலில் தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதன் பின்பு தயாராக எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து வதக்கவேண்டும்.
2. வெள்ளம் சூட்டில் உருகி கரைந்து தேங்காயோடு சேர்த்து கொஞ்சம் தளதளவென வரும். தேங்காயும் வெல்லமும் சேர்த்து கொஞ்சம் கெட்டி பதம் வரும் வரைக்கும் நன்றாக கலந்து விட்டு கொண்டே இருங்கள்.
3. அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டால். இந்த பூரணம் கொஞ்சம் இலகியது போல் இருந்தாலும் பரவாயில்லை. ஆறிய பின்பு கெட்டியாக மாறி விடும். இந்த பூரணம் அப்படியே இருக்கட்டும்.