Varalakshmi Vratham 2022
செய்யவேண்டியவை:
1. 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் கிடைக்க முதலில், இன்று மாலை வீடு சுத்தம் செய்ய வேண்டும்.
2. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து குளித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். கோலம் மூலம் மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு அழைக்க வேண்டும்.
3. வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இந்த நாளில் வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும்.
Varalakshmi Vratham 2022
4. பின்னர் தலையை நன்றாக காய வைத்து பின்னி பூஜை செய்ய அமரவேண்டும்விளக்கேற்றி வழிபடுவதும், தீப, தூபத்தை வீடு முழுவதும் காண்பிக்கவும்.
5. வாசனை புகையை இல்லம் முழுவதும் நிறைத்து இருக்க வேண்டும். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு இவற்றை இட்டு, கலசத்தை பட்டாடையால் அலங்கரித்து, அதன் மீது மாவிலைகளை வைக்கவும். இல்லையென்றால், ஒரு தேங்காய் மீது மஞ்சளால் தேவியின் முகத்தை வடித்து பூஜை செய்து வழிபடலாம்.
Varalakshmi Vratham:
செய்யக்கூடாதவை:
1. தலையை விரித்துப்போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. தலையில் இருந்து முடி கீழே விழுந்தால் சனி தோஷம் வந்து விடும்.
2. மனதில் பிரசனையுடன் பூஜை செய்ய கூடாது, பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும்.இல்லையென்றால், பல்வேறு தோஷங்கள் வந்து சேரும்.
3. இந்த நாளில் இரவல் அல்லது கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
Varalakshmi Vratham:
4. கசப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். அம்மன் வீடுகளில் வாசம் செய்யும் போது நல்ல மங்களம் பொங்கும் சர்க்கரைப் பொங்கல் பாயாசம் நைவேத்தியம் போன்ற உணவுகள் இருக்க வேண்டும்.
5. அம்மனின் உடைகள் வெள்ளை கறுப்பு நிறத்தில் இருக்கக்கூடாது. அதேபோன்று, பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். ரவிக்கை துணி மூத்த சுமங்கலிக்கு கொடுத்து ஆசி பெற வேண்டும்.
மேலும் படிக்க...வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள் இதோ!