Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

First Published Aug 4, 2022, 12:01 PM IST

Weight Loss Detox Drink: உடல் எடை குறைப்பு முதல் செரிமானம் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும், இந்த மூன்று டீடாக்ஸ் பானங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

Weight Loss Tips:

நீங்கள் எளிமையான முறையில் உடல் எடையை குறைத்து உடலினை ஆரோக்கியமாக வைத்து கொள்ள டீடாக்ஸ் பானங்கள் பெரும் உதவியாக உள்ளன. பொதுவாக உங்களது உணவில் இயற்கையான டீடாக்ஸ் பானங்கள் அருந்துவது  உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுவதோடு உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும் என்று உடற்பயிற்சி ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே ஆரோக்கியம் நிறைந்த டீடாக்ஸ் பானங்கள் குடிப்பது குறித்து சில எளிய டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க..Poorana Kozukattai: வரலட்சுமி விரத ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி? ...பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டும்

Weight Loss Tips:

மூலிகை டீ:

சந்தையில் எளிதில் கிடைக்கும் மூலிகை தேநீர் பால் கொண்டு தயாரிக்கப்படும் தேநீருக்கு சிறந்த மாற்றாக அமையும். லெமன் கிராஸில் இருந்து இந்த மூலிகை டீ தயாரிக்கப்படுகிறது. இந்த மூலிகை தேநீர் எடை குறைப்பு மட்டுமின்றி உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் செரிமானத்திற்கும், உதவுகிறது.
மேலும், பல் சொத்தையை நீக்குகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க...Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..
 

Weight Loss Tips:

லெமன் கிராஸ் டீ :

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர், 1 கப் லெமன் கிராஸ் மற்றும் 1 தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். முதலில் லெமன் கிராஸை தண்ணீரில் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி அரைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி, லெமன் கிராசை இந்த தண்ணீரை 10 நிமிடம் கொதிக்க வைத்து கொள்ளவும். ஒரு கோப்பையில் வடிகட்டி, அதில் தேன் சேர்த்து, இந்த டீயை சூடாக குடித்து சுவையை அனுபவிக்கவும்.

Detox drinks

துளசி தேநீர்:

ஒரு பாத்திரத்தில் 5-6 துளசி இலைகளை அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது தேநீர் ஒரு கோப்பையாக குறையும் வரை கொதிக்க விடவும். வடிகட்டிய பின்  தேநீரை சூடாக குடிக்கவும். துளசி தேநீர் என்பது புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது வாய் துர்நாற்றத்தை விரட்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Detox drinks

மஞ்சள் மற்றும் கிரீன் டீ:

தினமும் காலையில் மஞ்சள் இஞ்சி கிரீன் டீயை குளிர்கால நேரங்களில் தினமும் பருகுவதன் மூலம் தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே பாத்திரத்தில் 2 டம்ளர் எடுத்து அதனுடன் இஞ்சித்துருவல், மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் நல்ல பலனளிக்கும்

மேலும் படிக்க...Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

click me!