இரவு சாப்பிட்டு வெறும் 2 நிமிடம் நடந்தால் இவ்வளவு நன்மைகளா? அட இது தெரியாம போச்சே!

First Published Jan 21, 2023, 6:24 PM IST

இரவில் உணவு எடுத்து கொண்ட பிறகு சில நிமிடங்கள் நடப்பது சிறந்த பலனைத் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

நடைப்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதை கேட்டிருப்போம். பெரும்பாலும் காலையில் எழுந்து நடக்க வேண்டியதன் அவசியத்தை தான் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். சிலர் மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் இரவில் சாப்பிட்ட பிறகு நடப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இரவில் உணவு உண்ட 60 முதல் 90 நிமிடங்களுக்குள் ஒரு சிறிய நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். 

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி கூடம் செல்பவர்கள், அலுவலக வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைவருமே மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடக்க பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம். 

சில நிமிட நடைபயிற்சி நம்முடைய உடல் செயல்பாட்டை மேம்படுத்தும். வாயுக்கோளாறு, குடல் பிரச்சினைகள், வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்றவை விரைவில் குணமாகும். சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் நடப்பது செரிமான அமைப்பை மேம்பாடு அடைய செய்கிறது. 

 மன ஆரோக்கியம்

மன அழுத்தம், பதற்றம், மனசோர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மன ஆரோக்கியம் மேம்பட நடை பயிற்சி உதவுகிறது. மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய கார்டிசோல், அட்ரினலின் ஆகியவற்றின் சுரப்பை குறைக்கிறது. 

உடற்பயிற்சி 

நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாத நபராக இருந்தாலும் கூட, சாப்பிட்ட பிறகு நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். இது உடலை மேம்பாடு அடைய செய்யும். ஒரு நாளுக்கு 60 நிமிடங்கள் அல்லது 10,000 காலடிகள் நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

இதையும் படிங்க: உலக பணக்காரரின் மருமகள் என்றால் சும்மாவா...ராதிகா மெர்ச்சென்ட் பர்ஸ், ஆடை விலை தெரியுமா?

தூக்கமின்மை 

இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு, குடும்ப அழுத்தம், பொருளாதார சூழல் காரணமாக பலர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நடைபயிற்சி செய்வது நல்ல பலனளிக்கும். மன அழுத்தம் குறைந்து தூக்கமின்மை பிரச்சனை சரியாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இரத்த அழுத்தம் குறையும் 

 சாப்பிட்ட பிறகு நடப்பது 60 நிமிடங்கள் அல்லது 90 நிமிடங்கள் நடப்பது கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது. மேலும், இதயத்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து தப்ப முடியும். 

இரவில் சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஒருவருடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் கொஞ்சம் நடக்கலாமே... நண்பர்களே! 

இதையும் படிங்க: நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கணுமா? இதை சாப்பிட்டு பாருங்க.!

click me!