நம்முடைய அன்றாட வேலைகளுக்கு நடுவே ஏற்படும் சிறு உடல் நலக் குறைபாடுகளுக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்வது நல்லதல்ல. அது மாதிரியான சமயங்களில் வீட்டு வைத்திய குறிப்புகளை தெரிந்து வைத்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். நோயின்றி வாழ நம்முடைய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்கள் உதவியாக இருக்கும். அதற்கு தேவையான 11 வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு காணலாம்.
செரிமான கோளாறு
1). சோறு வடித்த நீரை ஒரு கப் எடுத்துக் கொண்டு, அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை கலந்து குடித்தால் வயிற்று உப்புசம் அஜீரணக் கோளாறு நீங்கும். கருப்பட்டியுடன் சுக்கு, 4 மிளகு ஆகியவற்றை சேர்த்து பொடித்து இரண்டு வேளைகள் உண்டு வந்தால் செரிமான கோளாறு சரியாகி பசி உண்டாகும்.
2). வசம்பை தீயில் சுட்டுக் கரியாக்கி கொள்ளுங்கள். அந்த தூளுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து அடிவயிற்றில் பூசினால் போதும். வயிற்றுப் பொருமல் குணமாகும்.
3). ஒமம், கருப்பட்டி ஆகியவை கொண்டு தயார் செய்த கசாயம் பருகினால் செரிமான கோளாறு சரியாகும்.
இடுப்பு வலி குணமாக...
4). சோறு வடித்த நீரை எடுத்து ஆறவைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் நெய், கொஞ்சம் சீரகம் கலந்து அருந்தினால் இடுப்புவலி குணமாகும்.
வியர்வை நாற்றம் மாற...
5). குளிக்கும் நீரில் படிகாரத்தை கலந்து நீராடினால் வியர்வை நாற்றம் மறையும். மஞ்சள் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் வலி குணமாக..
6). சாம்பிராணி, மஞ்சள், சர்க்கரை ஆகியவை கொண்டு தயார் செய்த கஷாயத்தை பாலும், வெல்லமும் கலந்து அருந்தினால் உடம்புவலி மாயமாகும்.
ஆறாத புண்களை குணப்படுத்த..
7). தேய்காய் எண்ணெய்யில் விரலி மஞ்சளை சுட்டு தூளாக்கி கலந்து காலையிலும், இரவிலும் போட்டு வந்தால் குணமாகாத புண்களும் விரைவில் குணமாகிவிடும்.
கண் நோய்கள் குணமாக...
8). பசும்பால் 100 மில்லி, அதே அளவு தண்ணீரில் எடுத்து வெண்தாமரை மலர்கள் போட்டு காய்ச்சி கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தை இறக்கிவிட்டு அந்த ஆவியை வலி கொண்ட கண்ணில் படும்படி செய்தால், கண் நோய்கள் குணமாகும்.
கபம் குணமாக...
9). வால்மிளகின் தூளை வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட்டால் கபம் நீங்கும்.
insects Bite
நினைவாற்றலுக்கு..
10). வல்லாரைக் கீரையை நிழலில் உலரவைத்து தூளாக்கி நாள்தோறும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு நினைவாற்றல் நிச்சயம் பெருகும்.
பூச்சிக்கடிக்கு மருந்து..
11). எறும்புகள் மாதிரியான சில பூச்சிகள் கடிப்பதால் ஏற்படும் வலி, வீக்கம் உடனே குணமாக வெங்காயத்தை நறுக்கி கடித்த இடத்தில் தேய்த்துவிடவும் .
மேலே குறிப்பிட்டுள்ள 11 வீட்டு வைத்திய குறிப்புகளும் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்படும் சமயங்களில் முயன்று பாருங்கள். இந்த குறிப்புகளை முதலுதவியாக கருதவும். தீவிரமான நோய்களுக்கு தீர்வாக நினைக்க வேண்டாம். மருத்துவரை அணுகவும்.
இதையும் படிங்க: அசைவ உணவுகளால் எலும்பு பாதிக்குமா? நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்