காதலர் பெயரை கரப்பான் பூச்சிக்கு சூட்டலாம்.. கனடா பூங்கா செய்த காதலர் தின விளம்பரம்

First Published | Jan 20, 2023, 3:11 PM IST

முன்னாள் காதலன் அல்லது காதலி மீது காட்ட முடியாத கோவம், வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக கனடா பூங்கா புது யோசனை வழங்கியுள்ளது.  

காதலை மென்மையான, அழகான உணர்வு என கூறினாலும் வலியும், கண்ணீரும் இல்லாத காதலர்களே கிடையாது. சில காதல் முறிந்த பிறகு அங்கு வெறுப்பு வருகிறது. முன்னாள் காதலன்/காதலி என்றான பிறகு கோவத்தை காட்டவும் முடிவதில்லை. விலகல் ஏற்பட்டுவிடுகிறது. அந்த வெறுப்பையும், கோவத்தையும் வெளிப்படுத்த கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்கலாம் என கனடாவில் உள்ள பூங்கா தெரிவித்துள்ளது.

கனடா நாட்டில் உள்ள டொராண்டோவில் அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய வெறுப்பை சம்பாதித்த மனிதர்களின் பெயரை கரப்பான்பூச்சிக்கு சூட்ட அனுமதித்துள்ளது. வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளை கொடுப்பவர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னாள் காதலிகள், காதலர்கள், எரிச்சலூட்டும் முதலாளிகள், எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் உறவினர்கள் என அனைவர் பெயரையும் கரப்பான் பூச்சிகளுக்கு வைக்கலாம். 


கனடாவின் டொராண்டோ உயிரியல் பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு 'நேம்-எ-ரோச்' பிரச்சாரத்தை கொண்டு வந்தது. வெறுப்பை வெளிப்படுத்த கரப்பான் பூச்சிக்கு பெயரிடும் வகையில் இந்த பரப்புரை அனுமதிக்கிறது. இதற்கு குறைந்தபட்சம் 25 டாலர்கள் (ரூபாய் 1,507) செலுத்த வேண்டும். வரும் காதலர் தினத்தில் கரப்பான் பூச்சிக்கு உங்களின் முன்னாள் காதலி அல்லது காதலரின் பெயரை சூட்டுங்கள் என உயிரியல் பூங்கா நிர்வாகம் விளம்பரம் தருகிறது. அதைப் போலவே எந்நேரமும் திட்டிக் கொண்டே இருக்கும் முதலாளிகள், கணவன், மனதை காயப்படுத்தும் யார் பெயரை வேண்டுமானாலும் கரப்பான் பூச்சிக்கு சூட்டலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நாம் வெளிப்படுத்தாத உணர்வுகள் மனதில் தேங்கும் போது மன அழுத்தம் ஏற்படுகிறது. வெளிப்படுத்தாத கோபம் வெறுப்பாக மாறி வன்மமாக உருவெடுக்கிறது. இதை வெளிப்படுத்தி மனதை இளகுவாக்க இந்த ஐடியாவை கனடா பூங்கா முன்னெடுத்துள்ளது. ஆனால் கரப்பான் பூச்சிக்கு அவதூறான பெயர்களையும், வெறுப்பை ஏற்படுத்தும் விதமான பெயர்களையும் வைக்க நிர்வாக விதிகள் அனுமதிக்கவில்லை. அனைத்து உயிர்களையும் மதிப்பதாகவும் நிர்வாகவும் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: இதழ் முத்தத்தில் இப்படி ஒரு ஆபத்தா? இனி ரொமாண்ஸ் பண்ணுறப்ப கவனம்...

Latest Videos

click me!