ஆண்களுக்கு ஏன் வயது மூத்த பெண்கள் மீது அதிக ஈர்ப்பு வருகிறது தெரியுமா?

First Published | Jan 18, 2023, 7:15 PM IST

ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களை அதிகம் விரும்புவது ஏன் என்பது குறித்து இங்கு காணலாம். 

பெரும்பாலான ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களை விரும்புகிறார்கள். அண்மையில் இளைஞர்களை அதிகம் ஈர்த்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் கூட கதாநாயகி, நாயகனை விட வயதில் மூத்தவராக இருப்பார். நடிகர் சிம்பு தன் திரைப்படங்களில் எப்போதும் வயது புரட்சி செய்பவர்தான். இதே மாதிரியான வயது மூத்த பெண்களை காதலிக்கும் திரைக்கதை அம்சம் கொண்ட வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்களையும் ஆண்கள் கூடுதல் ஆர்வத்துடன் வெற்றி பெற செய்திருக்கிறார்கள். தன்னை விட வயது மூத்த பெண்களை சகோதரி என அழைக்க பெரும்பாலான ஆண்கள் விரும்புவது கிடையாது. வயதில் மூத்த பெண்களை ஆண்கள் விரும்ப பல்வேறு காரணங்கள் உள்ளன. அதை இங்கு காணலாம்.  

வாழ்க்கை அனுபவம் 

வயதான மூத்த பெண்களுக்கு இளைய ஆண்களை விட அதிக வாழ்க்கை அனுபவம் இருக்கும். அதனால் சில பிரச்சனைகளை அவர்கள் எளிதில் கையாளுவர். தங்களுக்கு என்ன வேண்டும் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். திட்டமிட்டு செயல்படும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் தேவையில்லாத தொந்தரவுகள் அவர்களுக்கு இருப்பதில்லை. இது ஆண்களை அதிகமாக இருக்கிறது. ஆண்கள் எல்லா விஷயங்களையும் புற சூழல்களாகவே அணுகுகின்றனர். இதே மாதிரியான முதிர்ச்சி வயது மூத்த பெண்களிடம் காணப்படுவதும் ஈர்ப்புக்கு காரணம். 

Tap to resize

உணர்வு முதிர்ச்சி

வயது மூத்த பெண்கள் உணர்வுகளை பக்குவமாக கையாளுகிறார்கள். அவர்கள் வயது குறைந்த பெண்களைப் போல உணர்வு ரீதியாக குழப்பம் அடைவதில்லை. தங்களுடைய வேலை, வீடு, வாழ்க்கைத் துணை குறித்து அவர்களுக்கு தெளிவு உள்ளது. தங்களுடைய வாழ்க்கை துணை தங்களை கவனித்துக் கொள்வதை எல்லா ஆண்களும் வெகுவாக விரும்புகின்றனர். வயது மூத்த பெண்களிடம் அத்தகைய பாதுகாப்பு உணர்வு கிடைப்பதால் குழப்பங்கள் இன்றி ஈர்ப்பு உருவாகிறது. 

அறிவால் இணைவார்கள்! 

பொதுவாகவே பெண்கள் பக்குவப்பட்டவர்கள். புத்திசாலிகள். மேலும் தங்களை விட இளைய ஆண்களை காட்டிலும் அறிவில் சிறந்தவர்களாய் இருக்கிறார்கள். இதனால் வயது மூத்த பெண்கள் மீது சில ஆண்களுக்கு ஈர்ப்பு வருகிறது. இவர்கள் அந்த பெண்களின் புத்திசாலித்தனத்தை அதிகம் விரும்புகிறார்கள். தங்கள் துணையுடன் அரசியல், உலகளாவிய பிரச்சனைகள் மதம் போன்றவற்றை விவாதிக்க ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். இந்த பண்பு தங்கள் வயதை ஒத்த பெண்களை விடவும் வயது மூத்த பெண்களில் அதிகம் காணப்படுகிறது.

நிதி சுதந்திரம் 

சில வயது மூத்த பெண்களுக்கு நிதி புழக்கம் அதிகம் உள்ளது. அவர்கள் பொருளாதார ஆதரவளிப்பதால் சில ஆண்கள் ஈர்க்கப்படுகின்றனர். வயது மூத்த பெண்களுக்கு உணர்வுரீதியான புரிதல் அதிகமாக உள்ளது. ஆண்கள் தங்களை கவனித்துக் கொள்ள விரும்பும் வகையில் அவர்கள் நடந்து கொள்வதால் ஈர்க்கப்படுகிறார்கள். இவையெல்லாம் தான் ஆண்கள் விரும்பும் காரணங்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. 

Latest Videos

click me!