குஜராத்தி சடங்குடன் ஆனந்த் அம்பானி-ராதிகா நிச்சயதார்த்தம்! மணமகன் வீட்டில் கொடுக்கும் பொருள் என்ன தெரியுமா?

Published : Jan 19, 2023, 03:43 PM IST

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு இன்று இரவு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. அதன் முழுவிவரங்களை இங்கு காணலாம்.   

PREV
15
குஜராத்தி சடங்குடன் ஆனந்த் அம்பானி-ராதிகா நிச்சயதார்த்தம்! மணமகன் வீட்டில் கொடுக்கும் பொருள் என்ன தெரியுமா?
Image: Varinder Chawla / Instagram

இந்தியளவில் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. ராதிகா, என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்ச்சன்ட், ஷாலியா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள். கடந்த மாதம் 29ஆம் தேதி இத்திருமணத்தை உறுதிபடுத்தும் வகையில் ராஜஸ்தானில் 'ரோக்கா' எனும் விழா நடத்தப்பட்டது. 

 

25

நேற்று ஆனந்த் அம்பானிக்கும், ராதிகாவுக்கும் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில், ஆலியா பட் பாடலுக்கு ராதிகா நடனமாடும் வீடியோ வைரலானது. இன்று இரவு 7 மணிக்கு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அல்டாமவுண்ட் சாலையில் நடக்கும் இந்த விழாவில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், இந்தி நடிகை, நடிகைகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

35
Image: abujanisandeepkhosla/instagram/

சங்கீத் விழாவில் ஜொலிக்கும் ராதிகா! 

நேற்று நடந்த சங்கீத் விழாவில் அதிக வேலைபாடுகளால் செய்யப்பட்ட எமரால்டு, தங்க நகைகளை ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார். அவரது லெஹங்கா ஆடை கண்களை கவரும் வகையில், மிரர் வேலைபாடுகளுடன் இருந்தது. பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா என்பவர் அதனை வடிவமைத்திருந்தார். 

 

 

45
Image: abujanisandeepkhosla/instagram/

குஜராத்தி சடங்குகளுடன் நிச்சயதார்த்தம்! 

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் குஜராத்தி சடங்குகளின் படி இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முன் நடைபெறும் இந்த விழாவை குஜராத்தில் கோல் தானா விழா என்கிறார்கள். கோல் என்றால் வெல்லம், தானா என்றால் கொத்தமல்லி விதைகள். இவை இரண்டையும் நிச்சயத்தார்த்த விழாவின் போது, ​​மணமகன் வீட்டில் கொண்டு வருவர். மணமகளின் குடும்பத்தினர் மணமகன் வீட்டிற்கு பரிசுகள், இனிப்புகளுடன் வருவார்கள். நிச்சயம் ஆகப் போகும் ஜோடிகள் மோதிரங்களை மாற்றிய பிறகு, ஐந்து திருமணமான பெண்களிடம் ஆசி பெறுவார்கள். 

55
Image: abujanisandeepkhosla/instagram/

காதல் திருமணம்? 

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் காதல் கதை குறித்து போதிய தகவல்கள் இல்லை. இருவரும் பால்ய நண்பர்கள் என பல தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் 2018ஆம் ஆண்டு பகிர்ந்த புகைப்படம் அப்போது வைரலானது. அதுமட்டுமின்றி இந்த ஜோடி அம்பானி குடும்பத்தின் அனைத்து நிகழ்வுகளிலும், விழாக்களிலும் இணைந்து தான் கலந்து கொள்வர். 

click me!

Recommended Stories