உலக பணக்காரரின் மருமகள் என்றால் சும்மாவா...ராதிகா மெர்ச்சென்ட் பர்ஸ், ஆடை விலை தெரியுமா?

Published : Jan 21, 2023, 04:40 PM ISTUpdated : Jan 21, 2023, 05:03 PM IST

விரைவில் முகேஷ் அம்பானியின் மருமகள் ஆகவிருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் உபயோகிக்கும் ஆடைகள், ஆபரணங்களின் பிரம்மிப்பூட்டும் விலை விவரங்களை இங்கு காணலாம். 

PREV
16
உலக பணக்காரரின் மருமகள் என்றால் சும்மாவா...ராதிகா மெர்ச்சென்ட் பர்ஸ், ஆடை விலை தெரியுமா?

அண்மையில் ராதிகா மெர்ச்சன்ட், ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டில் நடந்த இந்நிகழ்வில் முன்னணி தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் அசத்தலான உடைகளில் மிடுக்காக வந்திருந்தாலும், மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் எல்லோர் கண்களையும் கவர்ந்தார்.அவர் அணிந்திருந்த ஆடையின் விலையை இங்கு காணலாம். 

26
Image: Varinder Chawla / Instagram

 நிச்சயதார்த்தத்திற்கு முன்பு நடந்த மெஹந்தி விழாவில், இளம்சிவப்பு நிறத்தில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த ஆடை மிரர் வேலைபாடுகள் கொண்டிருந்தது. ஏராளமான எம்பிராய்டரி வேலைகளும் செய்யப்பட்ட அந்த உடையின் விலை 4 லட்ச ரூபாயாம்.

36

தங்க நிற லெஹங்கா அணிந்திருந்த ராதிகா மெர்ச்சன்ட், அதற்கு ஏற்ற மாதிரியான பெல்ட் மற்றும் காதணிகளை அணிந்திருந்தார். வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸ், தென்றலுக்கு கை குலுக்கும் காதணிகளுடன் தேவலோக கன்னி போல ராதிகா காண்போரை திகைக்க வைத்தார்.  இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்தார்.

46

தன்னுடைய நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட ராதிகா மெர்ச்சன்ட், டோல்ஸ் அண்ட் கபனாவின் பிராண்ட்டில் வெள்ளை வண்ணப் பூக்கள் டிசைன் கொண்ட உடை, அதே பிராண்டில் பிளாட்ஃபார்ம் ஹீல்ஸ் அணிந்துள்ளார். இதன் மதிப்பு 3.3 லட்ச ரூபாயாம். 

56

இந்தி திரையுலகின் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமண விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் கலந்துகொண்டார். அப்போது அவர் கைகளில் அட்டகாசமான சிறிய ஜூடித் லெய்பர் வாட்டர்மெலன் பாப்சிகல் கிளட்ச் பர்ஸ் இருந்தது. அதன் விலை 3.4 லட்ச ரூபாய். 

 

66

 கடந்த 2019ஆம் ஆண்டில் அர்மான் ஜெயின், அனிசா மல்ஹோத்ராவின் திருமணத்தில் கலந்து கொண்ட ராதிகா மெர்ச்சன்ட், ராகுல் மிஸ்ரா வடிவமைத்த மிருதுவான மற்றும் நேர்த்தியான ஐவரி லெஹங்காவை அணிந்திருந்தார். அதன் விலை சுமார் 4.1 லட்ச ரூபாய். மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அணிந்திருந்த ஆடைகளைவிடவும் தன்னுடைய நிச்சயத்தில் ராதிகா எளிமையை தான் கடைபிடித்திருக்கிறார் போலும். அவர் சங்கீத் விழாவில் அணிந்திருந்த ஆடை ரூ.4 லட்சம் மட்டுமே. 

click me!

Recommended Stories