விருது வழங்கும் விழாவில் இஷா அம்பானி அணிந்திருந்த ஆடை இத்தனை லட்சமா?

First Published | Oct 21, 2024, 3:39 PM IST

சனிக்கிழமை இரவு மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இஷா அம்பானிக்கு ‘இந்த ஆண்டின் ஐகான்’ விருது வழங்கப்பட்டது. இஷா அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Isha Ambani Dress

சனிக்கிழமை இரவு மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஷா அம்பானி அனைவரின் கவனத்தையும் . தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகளும், தொழிலதிபருமான இஷா அம்பானிக்கு ‘இந்த ஆண்டின் ஐகான்’ விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது. ஷாருக்கானின் மனைவியும் இண்டீரியர் டிசைனருமான கவுரி கான் அவருக்கு விருதை வழங்கினார்.

கௌரியிடமிருந்து விருதை ஏற்றுக்கொண்ட இஷா, இந்த விருதை தனது தாயார் நீதா அம்பானி மற்றும் தனது மகள் ஆதியாவுக்கு அர்ப்பணித்ததாக கூறினார். இதுகுறித்து பேசிய அவர் “ எனது அம்மா தான் எனக்கு ரோல் மாடல். அவர் இல்லை என்றால் இது எதுவும் இல்லை. என் அம்மாவுக்கு மிக்க நன்றி. உண்மையில் இதற்கு என் அம்மா தான் காரணம். அதே போல் ஒவ்வொரு நாளும் என்னை சிறப்பாய செயல்பட தூண்டும் என் மகள் ஆதியாவுக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

Isha Ambani Dress

விருதை பெற்றுக் கொண்ட பின்னர் கௌரி மற்றும் வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ராவுடன் போஸ் கொடுத்தார். இஷாவும் அனன்யா பாண்டே மற்றும் பாவனா பாண்டே ஆகியோரை வாழ்த்தினார். அவள் சென்றதும், இஷா அனன்யாவின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விடைபெற்றார். 

இதுதொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்வில் இஷா அம்பானி அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஸ்லீவ்லெஸ் வெள்ளை டாப்ஸ், கருப்பு கலரில் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தார்.. இஷா அணிந்திருந்த ஆடை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்தியாவின் விலையுயர்ந்த எருமை இதுதான்! இந்த விலைக்கு 2 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிடலாம்!

Tap to resize

Isha Ambani Dress

இஷா அம்பானி இத்தாலிய வடிவமைப்பாளர் ஷியாபரெல்லி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. அவரின் தங்கத்தால் செய்யப்பட்ட பட்டன்கள் பொருத்தப்பட்டிருந்தன. இஷாவின் இந்த வெள்ளை மற்றும் கருப்பு ஆடை ஷியாபரெல்லியின் இணையதளத்தில் 4500 யூரோக்களுக்கு (சுமார் ₹4.1 லட்சம்) விற்கப்படுகிறது. இதற்கிடையில், பாவாடை € 5500க்கு விற்கப்படுகிறது (தோராயமாக ₹5,01,435). அதாவது இந்திய விலையில் அதன் மதிப்பு ரூ. 9 லட்சம் ஆகும்.

இதனிடையே இஷா அம்பானியைத் தவிர, விருதுகள் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கிருத்தி சனோன், பாராலிம்பிக்ஸ் நட்சத்திரம் அவனி லெகாரா, அனன்யா பாண்டே மற்றும் கௌரி கான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். 

Latest Videos

click me!