
தற்போது பருவகால மாற்றங்கள், மாசுபாடு தவறான உணவு பழக்கங்கள் காரணமாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள், பள்ளங்கள் மற்றும் வறண்ட சருமம் போன்ற பல சரும பிரச்சனைகளை ஆண் பெண் என இருவரும் சந்திக்கின்றனர்.
முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்தால் கூட அவற்றால் வந்த தடங்கள் அப்படியே இருக்கும். இதனால் முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. குறிப்பாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் பளபளப்பான சருமத்திற்கு எதிரி என்றே சொல்லலாம்.
முகத்தில் இருக்கும் இந்த பிரச்சனைகள் ஆண் பெண் என இருவரும் மிகவும் கவலைப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் சந்தைகள் பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றால் சருமத்திற்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட சருமத்திற்கு சிறந்த தேர்வாக பரிகாரம் பயன்படுத்தலாம்.
படிகாரம் சருமத்திற்கு எப்படி உதவுகிறது?
படிகாரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், கிருமி நாசினிகள், அலர்ஜி எதிர் பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளன. இவை அனைத்துமே சருமத்திற்கு ரொம்பவே நல்லது. இதனால் சருமத்தை எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும். மேலும் இது தோல் எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. எனவே இப்போது இந்த பதிவில் சருமத்திற்கு படிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: Alum Benefits : 'படிகாரம்' உடலுக்கு தரும் நன்மைகள். பற்றி தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!
முகத்திற்கு படிகாரத்தை பயன்படுத்துவது எப்படி?
ஒன்று..
படிகாரம் & எலுமிச்சை
இதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு சிட்டிகை படிகார பொடி மற்றும் சிறிதளவு எலும்பிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கறைகள் மறைய ஆரம்பிக்கும்.
இரண்டு..
படிகாரம் & ரோஸ் வாட்டர்
ஒரு கிண்ணத்தில் படிகாரப் பொடி மற்றும் ரோஸ்வாட்டரை எடுத்து கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலந்து அதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவவும். இப்படி செய்வதினால் உங்கள் முகம் மென்மையாகும் மற்றும் முகப்பரு பிரச்சனை குறையும்.
இதையும் படிங்க: பணம் பெருக!! உங்க வீட்டில் படிகாரம் வச்சு பாருங்க.. எப்படி பண மழை பொழியும் தெரியுமா?
மூன்று..
படிகாரம் ஸ்க்ரப்
இதற்கு ஒரு கிண்ணத்தில் படிகாரம் பொடி, தயிர் மற்றும் தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு தண்ணீரை கொண்டு முகத்தை கழுவவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் இருக்கும் இறந்த சரும செல்கள் அகற்றப்படும் மற்றும் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
நான்கு...
படிகாரம் டோனர்
இதற்கு படிகாரத்தை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீர் நன்றாக ஆறியதும் சிறிதளவு பஞ்சு உதவியுடன் முகத்தில் தடவவும். இது தோல் துளைகளை இறுக்குவதற்கும், முகப்பருவை குறைப்பதற்கும் பெரிதும் உதவும்.
முக்கிய குறிப்பு:
உங்களுக்கு கடுமையான தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகாமல் மேலே சொன்ன விஷயங்களை ஒருபோது பயன்படுத்த வேண்டாம்.