
மழைக்காலம் வந்தாலே பல பிரச்சினைகளும் கூடவே வரும். குறிப்பாக சின்ன சின்ன பூச்சிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும் என்றே சொல்லலாம். ஆம், மழைக்காலத்தில் நாம் எவ்வளவு தான் பூச்சிகள் வீட்டிற்கு நுழையாத வகையில் வீட்டின் அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி வைத்தாலும் அவை மிகவும் சிறியதாக இருப்பதால் வீட்டிற்குள் எளிதாக நுழைந்து விடுகிறது.
அதுவும் குறிப்பாக மாலை வேளையில் சின்ன சின்ன பூச்சிகள் படையெடுத்து வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் பல்புகள் மற்றும் டியூப் லைட்டுகளை பார்த்தால் அவைகள் அதேயே சுற்றி சுற்றி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன் காரணமாக சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது அல்லது கொட்டாய் வரும் போது வாயை திறப்பது கூட மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் அவை விரைவாக கண்கள், வாய் அல்லது நாம் சாப்பிடும் உணவுகள் நுழைந்து விடுகின்றன.
இதனால் நீங்கள் மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்றால், இப்போது அது குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இந்த பூச்சிகளை நொடி பொழுதில் விரட்ட உதவும் சில வீட்டு வைத்தியங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும். சரி வாங்க இப்போது மழைக்காலத்தில் பல்புகளை சுற்றி வரும் பூச்சிகளை விரட்டுவதற்கான வழிகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க: அரிசிக்குள் வண்டுகள், பூச்சிகள் வருவதை தடுக்க 4 'நச்' டிப்ஸ்!!
மழைக்காலத்தில் பல்புகளை சுற்றி வரும் பூச்சிகளை விரட்டுவதற்கான வழிகள்:
கிராம் எண்ணெய்
இதற்கு முதலில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கிராம்பு எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு மாலை வேளையில் இந்த தண்ணீரை வீட்டின் எல்லா இடங்களிலும் மீது தெளிக்கவும். இப்படி செய்தால் பூச்சிகள், கொசுக்கள், ஈக்கள் ஓடிவிடும். வரவே வராது.
வேப்ப எண்ணெய்
மழைக்காலத்தில் பல்புகளை சுற்றி வரும் பூச்சிகளை விரட்ட வேப்ப எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் வேப்ப எண்ணெயில் இருந்து வரும் கடுமையான மற்றும் கசப்பான வாசனை பூச்சிகளுக்கு பிடிக்கவே பிடிக்காது. இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள் அதனுடன் சில துளிகள் வேப்ப எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும். மாலை வேளை வந்ததும் இந்த நீரை எல்லா இடங்களிலும் தெளிக்கவும். இப்படி செய்து வந்தால் வீட்டில் பூச்சிகள் தொல்லை இருக்கவே இருக்காது.
சமையல் சோடா & எலுமிச்சை சாறு
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிதளவு தண்ணீரில் சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்கவும். இப்போது அதை உங்கள் வீட்டின் அறை, சமையலறை, கழிப்பறை போன்ற இடங்களில் நன்றாக தெளிக்கவும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் பூச்சிகள் செத்து மடியும் மற்றும் வெளியில் இருந்து பூச்சிகள் உங்கள் வீட்டிற்கு வரவே வராது.
இதையும் படிங்க: இந்த ஒரே ஒரு பொருளை வைத்து வீட்டில் உள்ள ஈக்கள், கொசுக்களை விரட்டலாம்; எப்படி தெரியுமா?
குறிப்பு:
1. உங்கள் வீட்டில் வெள்ளை பல்புகள் அல்லது டியூப் லைட்டுகள் இருந்தால் அவற்றை மாலை வேளையில் அனைத்து விடுங்கள். மஞ்சள் பல்புகளை பயன்படுத்துங்கள். ஏனெனில் சிறிய மற்றும் பெரிய பூச்சிகள் அவற்றின் மீது அதிகம் இருக்காது. அதுபோல பூச்சிகள் சில நேரம் வாய், கண், காது மற்றும் மூக்கில் நுழைந்து விடும். அத்தகைய சூழ்நிலையில் இரவு தூங்கும் போது கொசுவலை பயன்படுத்த மறக்காதீர்கள்.
2. அதுபோல மாலை நேரத்தில் உங்கள் வீட்டில் வெளிச்சம் தேவைப்படாத எந்த அறையிலும் பல்புகளை பயன்படுத்த வேண்டாம் இதனால் அந்த பகுதிகளில் பூச்சிகள் தங்காது மேலும் பூச்சிகளை விரட்ட கொசு மேட் பயன்படுத்தலாம்.
3. மாலை வேளை வந்ததும் கற்பூரத்தை வீட்டில் எரித்து அதன் புகையை வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள். ஏனெனில் பூச்சிகளுக்கு கற்பூரத்திலிருந்து வெளிவரும் புகையானது பிடிக்கவே பிடிக்காது. மேலும் கற்பூரத்தின் புகையானது பூச்சிகளை கொல்லும் மற்றும் கொசுக்களும் வீட்டிற்குள் வருவது குறையும்.