
மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த பருவமழை நேரத்தில் நோய்கள், வைரஸ் தொற்றுகளின் ஆபத்து பல மடங்கு அதிகரிக்கும். மேலும் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால் தாகம் அதிகமாக எடுக்காது. இதனால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணமே நமக்கு வரவே வராது.. சொல்லப்போனால் அடிக்கடி தண்ணீர் குடிப்பதையே நிறுத்தி விடுகிறோம்.
ஆனால் இப்படி செய்வதினால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் தொற்று நோய்கள் சீக்கிரமாகவே தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மழைக்காலத்தில் உடலை எப்போது நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
இதற்காக வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு சில ஹெல்தி ட்ரிங்க்ஸ் குடிக்கலாம். தண்ணீர் குடித்தால் உடல் நீரேற்றமாக இருப்பது உண்மைதான். ஆனால் மழைக்காலத்தில் ஏற்படும் பருவகால நோய் தொற்றுகளை அகற்றவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான ஒரு சில பானங்களை கண்டிப்பாக குடிக்க வேண்டும். அந்த வகையில் இந்த மழைக்காலத்தில் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான பானங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: கால்களை மோசமாக்கும் பூஞ்சை தொற்று.. மழைக்காலத்தில் 'இப்படி' பண்ணா புண்களே வராது!!
மழைக்காலத்தில் நீரேற்றமாக இருக்க குடிக்க வேண்டிய 4 பானங்கள்:
1. லெமன் ஜூஸ்
மழைக்காலத்தில் காலை எழுந்தவுடன் நீங்கள் டீ காபி குடிப்பதற்கு பதிலாக சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும்.
2. மாதுளை ஜூஸ்
மாதுளையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி போன்றவை இருப்பதால் அவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. மழைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க மாதுளை ஜூசை தினமும் காலை குடிக்க வேண்டும்.
3. தர்பூசணி ஜூஸ்
தர்பூசணி ஜூஸை வெயில் காலத்தில் மட்டுமல்ல மழை காலத்திலும் குடிக்கலாம். இதில் பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் காலையில் இதை குடித்து வந்தால் செரிமானம் ஆரோக்கியமாகவும் இருக்கும், உடலை ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.
4. வாழைப்பழம் மில்க் ஷேக்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் அவை உடலுக்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்குகிறது. மழைக்காலத்தில் காலையில் வாழைப்பழத்தில் மில்க் ஷேக் குடித்து வந்தால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். இதனால் சோர்வு, களைப்பு நீங்கும். இதனுடன் நீங்கள் உலர் பழங்களையும் சேர்த்து குடித்தால் அருமையாக இருக்கும்.
இது தவிர நீங்கள் மூலிகையை டீ, சூப் ஆகியவற்றை கூட குடிக்கலாம். இதனால் உடலில் சக்தி அதிகரிக்கும் உடல் ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் இருக்கும். எனவே கண்டிப்பாக குடியுங்கள்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் கொசு வராமல் தடுக்க 'கற்பூரத்தை' இப்படி பயன்படுத்துங்க!!