
இன்றைய காலகட்டத்தில் எந்தவித உடல் உழைப்பும் இல்லாத மோசமான வாழ்க்கை முறையால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் உடல் வலிமையுடன் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கிய காரணம் அவர்களது வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் தான்.
ஆனால் இன்று ஒரே இடத்தில் அமர்ந்தபடி கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இது தவிர மொபைலில் எந்நேரமும் நம்மில் பலரும் இருக்கிறோம். மேலும் எங்கு பிரயாணம் பண்ணினாலும் பைக் மற்றும் காரில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதனால் உடல் உழைப்பானது பெருமளவு குறைந்துவிட்டதால், இதன் விளைவாக நமக்கு கிடைப்பது நோய்கள்தான்.
அதிலும் குறிப்பாக தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன் அதிகரிப்பு. ஆம், உடல் எடை அதிகரிப்பு காரணமாக சர்க்கரை நோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும். எனவே உடல் எடையை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம்.
உடல் எடையை குறைப்பதற்காக சில பணத்தை செலவழித்து ஜிம்மிற்கு செல்கிறார்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமலும், அதிக முயற்சியும் செய்யாமலும் அதிகரித்த உடல் எடையை சுலபமாக குறைக்க ஒரே வழி நடைப்பயிற்சி தான். ஆம் தினமும் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்து வந்தால், ஒரே வாரத்தில் மூன்று கிலோ வரை எடை குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன.
ஒரு மணி நேரம் நடந்தால் என்ன ஆகும்?
பல ஆய்வுகள் படி, 7 நாட்கள் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் நடந்தால் செய்து வந்தால், மூன்று கிலோ வரை எடையை குறைக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். உங்களுக்கு தெரியுமா.. தொடர்ந்து மூன்று மாதம் வரை தினமும் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் நடந்தால் குறைந்த பட்சம் 20 முதல் 30 கிலோ வரை எடையை குறைக்கலாமாம்.
இதையும் படிங்க: கர்ப்பக்காலத்தில் வாக்கிங் போனா சுகப்பிரசவம் ஆகுமா? எவ்வளவு நேரம் போகனும் தெரியுமா?
இதுமட்டும் போதாது:
எடையை குறைக்க வெறும் நடைபயிற்சி மட்டும் போதாது. ஆம் நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் நடக்கும் போது டயட்டை கண்டிப்பாக கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். இதற்கு நீங்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. இது தவிர கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளையும் சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். மேலும், இறைச்சி சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் புதிய பழங்கள் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை நீங்கள் பின்பற்றினால் மட்டுமே ஒரு மாதத்திற்குள்ளேயே நல்ல பலன்களை காண்பீர்கள்.
இதையும் படிங்க: மாதவிடாய் நாட்கள்ல வாக்கிங் போனா நல்லதா? உடம்புக்கு என்னாகும் தெரியுமா?
ஒரு மணி நேரம் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
நீங்கள் தினமும் நடக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக உங்களது வேகத்தை அதிகரிக்க வேண்டும். இது உங்களுக்கு சற்று கடினமாக இருந்தாலும் முடிவில் நல்ல பலன்களை பெறுவீர்கள். ஒரு மணி நேரம் நடந்தால் உடல் எடை குறைவது மட்டுமின்றி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் மறதி பிரச்சனை வரவே வராது. மேலும் தினமும் ஒரு மணி நேரம் நடப்பதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவும் குறையும். இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
அதுபோல உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும். மேலும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களும் நடந்தால் சுவாச பிரச்சனை சீராகும்.