அரிசியை ஊறவைத்து சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
அரிசியில் பைடிக் அமிலம் என்ற ஒரு பொருள் உள்ளது. இது உடலில் இரும்பு, துத்தநாகம் போன்ற முக்கியமான தாதுக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. மேலும் அரிசியை ஊறவைப்பதன் மூலம் இந்த பைடிக் அமிலம் வெகுவாக குறைகிறது. இதனால் மூலம் உடலில் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்களின் அளவு அதிகரிக்கிறது. மேலும் ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
செரிமானத்தை எளிதாக்குகிறது
அரிசியை ஊறவைத்து சமைப்பதால் அரிசியில் உள்ள மாவுசத்து மென்மையாகிறது. இதனால் அரிசி எளிதில் செரிமானமாகிறது. இப்படி செய்வது குழந்தைகள், வயதானவர்கள், செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் மலச்சிக்கலையும் தவிர்க்கிறது.