மழைக்காலம் தான் என்றாலும், நம் உடலை உள்ளிருந்து நீர்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ள, கொதிக்க வைத்து ஆறவைக்கப்பட்ட நீரை குடிப்பது மிகவும் நல்லது. அதிலும் இந்த மழை காலத்தில் சீரகம் போன்ற செரிமானத்திற்கும், உடல் நலத்திற்கும் உதவும் பொருட்களை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதை வடிகட்டி குடிப்பது மிகவும் நல்லது. இது நமது உடலை ஈரப்பதத்தோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல் நமது தோளையும் பெரிய அளவில் பாதுகாக்கிறது. இஞ்சி பூண்டு போன்றவற்றை அதிக அளவில் இந்த மழை காலத்தில் சேர்த்துக் கொள்வது நமக்கு அதிக எதிர்ப் சக்தியையும் தருகிறது.