கிருமிகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மருத்துவர்கள் சில எளிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
6 மாத விதிமுறை: ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை பழைய தலையணைகளை மாற்றிவிட்டுப் புதிய தலையணைகளைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
உறைகளை மாற்றுங்கள்: தலையணை உறைகளை (Pillow Covers) வாரத்திற்கு இரண்டு முறையாவது கட்டாயம் துவைத்து மாற்ற வேண்டும்.
இயற்கை கிருமிநாசினி: வாரம் ஒருமுறை தலையணையை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் தலையணையில் இருக்கும் பாக்டீரியாக்களை இயற்கையாகவே அழித்துவிடும்.
சுத்தமான படுக்கை அறை என்பது நல்ல தூக்கத்திற்கு மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியத்திற்கும் அடித்தளமாகும். எனவே, உங்களது பழைய தலையணைகளை உடனே மாற்றி, நோய் எதிர்ப்புச் சக்தியைக் காத்திடுங்கள்.