சமையல் எரிவாயு விலை உயர்வால், கேஸ் பர்னர்களில் உள்ள அடைப்புகளை நீக்குவது அவசியம். வீட்டில் உள்ள ஈனோ, பேக்கிங் சோடா போன்ற பொருட்களைக் கொண்டு பர்னர்களை மாதம் ஒருமுறை சுத்தம் செய்வதன் மூலம், கேஸ் சிலிண்டரை கூடுதலாக 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
கேஸ் சிலிண்டர் விலை விர்ரென்று ஏறிக்கொண்டே இருக்கும் இந்த காலத்தில், சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்துவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக முக்கியம். பல நேரங்களில் கேஸ் பர்னர்களில் படியும் எண்ணெய் பிசுக்குகள் மற்றும் அழுக்குகளால் அடைப்பு ஏற்பட்டு, கேஸ் வீணாவதுடன் சமைக்கும் நேரமும் அதிகரிக்கும். மாதம் ஒருமுறை பர்னர்களைச் சுத்தமாக வைப்பதன் மூலம், உங்களது கேஸ் சிலிண்டரை கூடுதலாக 15 நாட்கள் வரை நீட்டிக்க முடியும். பர்னர்களை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிதாகச் சுத்தம் செய்ய 3 சூப்பர் டிப்ஸ்.
24
ஈனோ மற்றும் எலுமிச்சை மேஜிக்
பர்னர்களில் பிசுபிசுப்பான எண்ணெய் கறைகள் அதிகமாக இருந்தால் இந்த முறை மிகச்சிறந்தது. ஒரு அகலமான பாத்திரத்தில் பர்னர்களை வைத்து, அது மூழ்கும் அளவுக்குக் கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றுங்கள். அதில் ஒரு முழு எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, கூடவே ஒரு பாக்கெட் ஈனோ பவுடரை (Eno) கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். இப்போது தண்ணீர் சோடா போல பொங்கி வரும். இந்தத் தண்ணீரில் பர்னர்களை இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள். மறுநாள் காலை, தண்ணீரின் நிறம் மாறி அழுக்குகள் தனியாகப் பிரிந்திருப்பதை நீங்களே பார்க்கலாம்.
வினிகர் கறைகளை எளிதில் தளர்த்தும் குணம் கொண்டது. ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சம அளவு வினிகர் சேர்த்து, அதில் பர்னர்களை 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வெளியில் எடுத்து, ஒரு சிறிய துண்டு புளி அல்லது பாத்திரம் தேய்க்கும் கம்பி நார் (Steel Scrubber) கொண்டு நன்றாகத் தேய்த்தால் கறைகள் சட்டென்று உதிர்ந்துவிடும். அடைப்புகள் இன்னும் நீங்கவில்லை என்றால், ஒரு சிறிய குண்டூசியை (Pin) எடுத்து பர்னர் துளைகளில் குத்திவிட்டு, குழாய் தண்ணீரில் காட்டினால் உள்ளே இருக்கும் அடைப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
அடிக்கடி பர்னர்களை பளிச்சென்று பராமரிக்க இந்த எளிய முறையைப் பயன்படுத்தலாம். அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு, அதில் 2 முதல் 3 ஸ்பூன் பேக்கிங் சோடா, சிறிதளவு பாத்திரம் தேய்க்கும் டிஷ் வாஷ் ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இக்கலவையில் பர்னர்களை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, ஒரு பழைய டூத் பிரஷ்ஷை (Toothbrush) கொண்டு தேய்த்துக் கழுவினால் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் சுத்தமாகிவிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.