
பெரும்பாலான மக்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள காலையில் வெறும் வயிற்றில் ஏதாவது ஒரு பானத்துடன் தங்களது நாளை தொடங்குவார்கள். அதாவது, வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை தண்ணீர், டீ, காபி அல்லது மூலிகை பானம் போன்றவற்றை குடிப்பார்கள். உண்மையில், காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பானம் நம் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏனெனில் சர்க்கரை நோயாளிகளின் உடல் ரொம்பவே உணர்கிறன் கொண்டது. இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ அதனால் அவர்களது உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் அவர்கள் பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில், நம்மில் பலர் காலையில் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா..கூடாதா? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் 5 சப்ளிமெண்ட்ஸ் எடுக்கக்கூடாது!
சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா?
ஆம், சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் டீ குடிக்கலாம். ஆனால் அதை அவர்கள் தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி விடக்கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சர்க்கரை நோயாளி ஒருவர் தினமும் வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால் சில சமயங்களில் அதனால் அவர்களது ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும் அதுவும் குறிப்பாக டீயில் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்பவருக்கு இது நிகழும். அதற்கு பதிலாக, குறைந்த அளவு சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாமல் டீ குடித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கான '5' ஸ்பெஷல் ட்ரிங்க்ஸ்; வெறும் வயிற்றில் குடிங்க!
சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் முன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை:
பால் டீ குடிக்காதீங்க!
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் டீ குடிக்க விரும்பினால் பால் டீக்கு பதிலாக, பிளாக் டீ, மூலிகை டீ அல்லது கிரீன் டீ இது போன்றவற்றை குடிக்கலாம். இது உங்களது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. முக்கியமாக, கிரீன் டீ ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
காஃபின்:
டீ யில் காஃபின் அதிகமாக உள்ளது. காஃபின் இன்சுலின் உணர்திறனை பாதிக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகளவு காஃபின் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அளவுக்கு அதிகமாக காஃபின் எடுத்துக் கொண்டால் அது உங்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இதன் விளைவாக பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் இதன் தாக்கம் நீண்ட காலம் நீடிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் டீ எப்போது குடிக்கலாம்?
சர்க்கரை நோயாளிகள் டீ எப்போதும் குடிக்க கூடாது. அது உங்களது நாளில் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி டீ குடிப்பது தான் உங்களது சர்க்கரை அளவு மோசமாக பாதிக்கப்படும். நீங்கள் சர்க்கரை கலந்த டீயை அடிக்கடி குடிப்பது தவிர்ப்பது நல்லது. எனவே நீங்கள் காலையில் மற்றும் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு:
சர்க்கரை நோயாளிகள் காலையில் உணவுடன் டீ குடிப்பது நன்மை பயக்கும் என்றாலும் நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நபரின் உடலும் வித்தியாசமானது என்பதால், அதை வெவ்வேறு வகையான உணவுடன் உடலில் எதிர் வினை புரியும் முக்கியமாக நீங்கள் ரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த மருந்து எடுத்துக் கொண்டால் வெறும் வயிற்றில் டீ குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.