ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) நிறுவனம் பட்ஜெட் விலையில் உள்நாடு மற்றும் வெளிநாடு டூர் பேக்கேஜ்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஏராளமான மக்கள் இதனால் பயனைடைந்து வரும் நிலையில், ஐஆர்சிடிசி தற்போது துபாய், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு டூர் பேக்கேஜ்களை கொண்டு வந்துள்ளது. அது குறித்து விரிவாக காண்போம்.
துபாய் மற்றும் அபுதாபி பேக்கேஜ்
SIZZLING DUBAI என பெயரிடப்பட்ட துபாய் மற்றும் அபுதாபி டூர் பேக்கேஜை அபுதாபி எக்ஸ் லக்னோ (NLO26) உடன் இணைந்து ஐஆர்சடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இது 7 பகல் மற்றும் 6 இரவுகள் கொண்ட டூர் பேக்கேஜ் ஆகும். இந்த பயண தொகுப்பில் மிராக்கிள் கார்டன், மெரினா குரூஸ் சவாரி, புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் மியூசியம், பெல்லி டான்சிங் போன்றவற்றை ரசிக்கலாம். இந்த பயணம் லக்னோவில் இருந்து தொடங்குகிறது.