Kids Angry
தற்போதைய கால கட்டத்தில் குழந்தைகளை கையாள்வது எளிதல்ல. அவர்கள் ஆசைப்பட்ட விஷயம் உடனே கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக அதிகம் பிடிவாத குணத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்தால் கத்தி கூச்சல் போட்டு, வீட்டையே தலைகீழாக மாற்றிவிடுவார்கள்.
உடல்நலம் சரி இல்லை என்றால் மருத்துவமனைக்கு வரும் பெற்றோருக்கு அடுத்தபடியாக இப்படி குழந்தைகள் அதீத கோவம் கொள்வதால், ஏதேனும் பிரச்சனை வருமா? என எண்ணி மருத்துவமனைக்கு வரும் பெற்றோர்களையும் இந்த காலத்தில் பார்க்க முடிகிறது. காரணம் பெற்றோர் குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்த சிரமப்பட வேண்டியுள்ளது. சரி இப்படி பட்ட குழந்தைகளின் கோவத்தை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
How to Control Kids Angry
பொதுவாக குழந்தைகளின் கோவம் அதிகரித்து வரும் கோபத்திற்கு பெற்றோரே காரணமாக இருக்கலாம். முன்பு போல, இப்போதெல்லாம் குழந்தைகள் வெளியில் விளையாடுவதில்லை. பெற்றோர் அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. கீழே விழுந்து விடுவார்கள் என்கிற பயமும் இதற்க்கு ஒரு காரணம். சிலர் நேரம் வீணாகிறது, என்று நினைத்து அவர்களை ஏதாவது ஒரு பாடத்தில் சேர்த்து விடுகிறார்கள். தங்கள் விரும்பும்படி செய்ய முடியாத விரக்தியின் வெளிப்பாடு கூட குழந்தைகளுக்கு கோவத்தை ஏற்படுத்தலாம். எனவே குழந்தைகள் அவர்களின் நண்பர்களுடன் அல்லது அக்கம் பக்கத்துக்கு சிறு பிள்ளைகளுடன் விளையாட விரும்பினால் அதற்க்கு அனுமதி கொடுங்கள். அதே நேரம் குழந்தைகள் உங்கள் பார்வையிலேயே இருப்பது சிறந்தது.
Angry Management
குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது அதிக குறும்புகள் செய்வார்கள். தொடர்ந்து ஏதாவது கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்வது உங்களுக்கு கோவத்தை கூட ஏற்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் அவர்கள் மீது கோவம் கொள்ளாதீர்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அவர்களுக்கு புரியும்படி சொல்லுங்கள். இப்படி செய்வதால், உங்களிடம் எந்த ஒரு விஷயத்தையும் குழந்தைகள் சொல்ல விருப்பப்படுவார்கள். அம்மா - அப்பா கேள்வி கேட்டால் திட்டுவார்கள், கோவப்படுவார்கள் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் எழாது. குழந்தைகள் தங்களின் கேள்வியை கேட்ட சுதந்திரம் இல்லை என நினைக்கும் போது அவர்களை கோவம் ஆட்கொள்ளும். எனவே பெற்றோர் தான் இதுபோன்ற விஷயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Parenting Tips
படிப்பில் அதிக போட்டி நிலவி வருவதால், பல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என அவர்களை கட்டாய படுத்துகிறார்கள். ஆனால் படிப்பில் அவர்களுக்கு நாட்டம் இல்லை என்றால், அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி சொல்லிக்கொடுக்க முயற்சி செய்யுங்கள் கட்டாயப்படுத்துவது குழந்தைகளை அழுத்தத்தில் தள்ளும். படிப்பு என்பது அவசியம் தான் ஆனால் அது அவர்களுக்கு ஒரு அழுத்தமாக மாறும் பச்சத்தில் கோவக்காரர்களாக மாற்றும்.
Dont allow to use Cellphones
நாம் சிறுவர்களாக இருந்த போது, கைபேசியின் பயன்பாடு இல்லை. ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் காலையிலிருந்து இரவு வரை கைபேசியில் மூழ்கியிருக்கிறார்கள். அதிகமாக கைபேசி பார்ப்பதும் குழந்தைகளின் கோபம் அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, முடிந்தவரை, அவர்களுக்கு கைபேசி பழக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. அவர்களை அதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.
kids health
குழந்தைகள் கேட்பதை வாங்கு கொடுப்பது தவறு இல்லை. அது அவர்களுக்கு பயன்படும் ஒன்றாக இருக்க வேண்டும். பார்ப்பதை எல்லாம் கேட்டால், அவர்கள் புரிந்து கொள்ளும் படி அவர்களை சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள். சில நேரங்களில் நீங்கள் நிதி நெருக்கடி அல்லது பிற காரணங்களால் அவர்களின் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாமல் போனால் அது அவர்களின் கோவத்தை தூண்டும். குழந்தைகள் விஷயத்தில் அன்பும் முக்கியம் அதே சமயம் அவர்களை புரிந்து கொள்வதும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.