இப்போதைய குழந்தைகள் காலையிலிருந்து இரவு வரை மொபைல் போனிலேயே மூழ்கியிருக்கிறார்கள். அதிகமாக செல்போன் பார்ப்பதும் குழந்தைகளின் கோபம் அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, முடிந்தவரை குழந்தைகளின் திரை நேரத்தை குறைப்பது நல்லது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவர்கள் மொபைல் போன் பார்க்க வேண்டும் என்ற வரம்பை விதிக்க வேண்டும்.
அதீத அன்பு கூட குழந்தைகளின் கோபத்திற்கு காரணமாக அமையலாம். அன்பின் பெயரில் பல பெற்றோர்கள் பொம்மைகளிலிருந்து உணவு வரை, குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். பல நேரங்களில், பொருளாதார நெருக்கடி அல்லது பிற காரணங்களால் அவர்களின் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற முடிவதில்லை. இந்த ஏமாற்றம் குழந்தைகளிடம் கோபத்தை உருவாக்குகிறது.
குழந்தைகள் எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுக்காமல் என்ன காரணமோ அதை சொல்லி அவர்களிடம் புரிய வைப்பது நல்லது.
குழந்தைகள் அமைதியாக இருக்கும்போதுதான் அவர்கள் குறைவாக கோபப்படுகிறார்கள், ஏதாவது நல்லது செய்ய முடியும். எனவே, பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.