walking benefits in tamil
பொதுவாக உறங்க செல்வது நம் உடலை ஓய்வாக வைத்திருக்க தான். ஆனால் ஓய்வெடுப்பதற்கு முன்பு மிதமான பயிற்சியாக ஒரு குறுநடை செல்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நீங்கள் உறங்கச் செல்வதற்கு முன்பாக நடைபயிற்சி மேற்கொள்வது ஏன் அவசியம், இதனால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய 10 வகையான நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
Health Benefits of Walking Before Sleep in Tamil
1). ஆழ்ந்த தூக்கம்:
தினமும் தூங்குவதற்கு முன்பாக நடைபயிற்சி மேற்கொள்வது உங்களுடைய தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலின் சர்க்காடியன் தாளத்தை அதாவது, நாம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது, உறங்குவது என பழக்கிய உடலின் யூகிக்கக்கூடிய உயிரியல் சுழற்சியை சீராக்க நடைபயிற்சி உதவும். தினமும் நடப்பது மூளைக்கு தூங்குவதற்கான சிக்னலை அளிக்கும். இதனால் பதற்றம், மன அழுத்தம் ஆகியவை குறைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது.
2). இரத்த ஓட்டம் சீராகும்:
இரவில் தூங்கும் முன் நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். மூட்டுகள் நன்கு இயங்கும். தூங்க செல்லும் முன் நடப்பதால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடலின் அனைத்து பாகங்களிலுக்கும் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் தடையின்றி கிடைக்கும்.
இதையும் படிங்க: இந்த '1' விஷயம் சரியா பண்ணாம 10,000 காலடிகள் நடந்தாலும் வேஸ்ட்தான் தெரியுமா?
Walking before bed benefits in tamil
3). நீங்கும் மன அழுத்தம்!
நடைபயிற்சி மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின்களை தூண்டும். இதனால் மன அழுத்தத்தைக் குறைந்து நிம்மதியாக உணர்வீர்கள். உங்களுடைய கவலைகளில் இருந்து விடுபட்டு மனதைத் தெளிவுபடுத்த நடைபயிற்சி உதவியாக இருக்கும். உங்களுடைய ரத்த அழுத்தம் குறைய நடைபயிற்சி உதவுகிறது. உயரத்த அழுத்தம் இருப்பவர்கள் இரவில் உறங்குவதற்கு முன்பு நடப்பதால் அவர்களுடைய ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் வாய்ப்புள்ளது. இதயம் ஆரோக்கியமாக இருக்க உறங்கும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
4). மேம்பட்ட செரிமானம்:
இரவு சாப்பிட்ட பின் நடந்தால் அஜீரணம், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். உணவு செரிமானம் மேம்படும். உணவானது செரிமானப் பாதை மூலம் விரைவாக கொண்டு செல்லப்படும். வயிற்றுக்கோளாறுகளால் அசௌகரியம் இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம்.
இதையும் படிங்க: வாக்கிங் போறத வைச்சு உடல் 'ஆரோக்கியத்தை' கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா?
walking before sleep benefits in tamil
5). எடை குறைக்க!
தினம் இரவில் சாப்பிட்ட பின் நடைபயிற்சி மேற்கொள்வதால் உங்களுடைய எடையை கட்டுக்குள் வைக்க முடியும். நடைபயிற்சி கெட்ட கொழுப்பினை எரித்து எடையை குறைக்க உதவுகிறது. தினமும் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்தால் உங்களுடைய வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. உடலில் அதிக ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு அதிகமான ஆற்றல் எடுத்துக் கொள்ளப்படுவதால் உடல் எடையும் குறைகிறது. நல்ல தூக்கம் வரும்.
6). தெளிவான மனம்:
உறங்கும் முன் வாக்கிங் செய்தால் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவுறும். நிம்மதியாகவும் அமைதியாகவும் தூங்க முடியும். அமைதியாக நடக்கும்போது உடல் அசைவில் உண்டாகும் ஒருவித தாள இயக்கம் மனதில் தியான விளைவை உண்டாக்கும். இதனால் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். கண்ணாடி போல துல்லியமாக மனத்தெளிவு எண்ணங்களில் பிரதிபலிக்கும்.
7). வலுவாகும் நோயெதிர்ப்பு மண்டலம்:
உறங்கச் செல்லும் முன்பாக நடைபயிற்சி மேற்கொள்வது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. தினமும் நடப்பது உங்களுடைய உடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று நோய்களுடைய தாக்கம் குறைவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நீங்கள் தினமும் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது உங்களுடைய உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.
Tips for walking before sleep in tamil
8). அதிகமாகும் வாழ்நாள்!
தினமும் இரவில் நடைபயிற்சி செய்வது உங்களுடைய ஆயுளை நீட்டிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி பயனளிக்கிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்த நடைபயிற்சி உதவுகிறது.
9). தசைகள் தளர்வாகும்:
பகலில் உடல் செயல்பாடுகளால் தசை விறைப்பு, தசைகளில் வலி ஆகியவை ஏற்பட்டிருந்தால் இரவில் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய தசைகள் தளரும். இதனால் நீங்கள் இலகுவாக உணர்வீர்கள். தேவையில்லாத பதற்றம் நீங்குகிறது. நடைப்பயிற்சி தசைகளை தளர செய்து உங்களை மீட்டு எடுக்கிறது. ஆழ்ந்த தூக்கம் வரும்.