சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா.. கூடாதா..? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?

First Published Sep 23, 2024, 9:38 AM IST

Chicken and Diabetes : சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? கூடாதா? எந்த வகையில் அவர்கள் சிக்கனை எடுத்துக் கொள்ளலாம் இது போன்ற பல கேள்விகளுக்கான விடை உள்ளே.

Chicken and Diabetes

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அலாதி பிரியம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. சிலர் தினமும் சிக்கன் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு வகையில் அவர்கள் சிக்கனை எடுத்துக் கொள்வார்கள். உலகம் முழுவதிலும் அதிகமாக சாப்பிடும் உணவுகளில் சிக்கனும் ஒன்றாகும். சிக்கன் புரதத்தின் மிக சிறந்த மூலமாக கருதப்படுகிறது. 

இத்தகைய சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? கூடாதா? என்று சந்தேகம் பலருக்கும் உண்டு. ஏனெனில், சர்க்கரை நோயாளிகளின் உணவு முறை முற்றிலும் மாறுபட்டது. குறிப்பாக, அவர்கள் அசைவம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள். எனவே, சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடுவது நல்லதா..? கெட்டதா? எந்த வகையில் சிக்கனை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் இது போன்ற பல கேள்விகளுக்கான விடை இந்த பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Chicken and Diabetes

சர்க்கரை நோய் என்பது ஒரு பொதுவான நாள்பட்ட நோயாகும். முந்தைய காலத்தில் சர்க்கரை நோய் என்ற ஒரு நோயேயில்லை. பிறகு வயதானவர்களிடம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எந்த வயது வித்தியாசமுமின்றி அனைவரையும் சர்க்கரை நோய் வாட்டி வதைக்கிறது.

உலகம் முழுவதிலும் இந்த நோயின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக நம்முடைய நாடு இந்நோயின் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு நம்முடைய நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறார்கள். இன்னும் வருங்காலத்தில் இன்னும் முயல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுமே தவிர ஒருபோதும் குறையாது.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகளே இந்த 1 தப்பு மட்டும் மதிய உணவு சாப்பிடும்போது பண்ணிடாதீங்க..

Latest Videos


Chicken and Diabetes

நம்முடைய உடலானது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத போது இது நிகழ்கிறது. கணையத்தால் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போகும்போது அல்லது உடலில் இன்சுலனை சரியாக பயன்படுத்த முடியாமல் போகும்போது சர்க்கரை நோய் வருகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் சாப்பிடும் உணவு அதிக கவனம் செலுத்த வேண்டும். காரணம், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் அது நேரடியாக அவர்களது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டால், அது உடலில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி,  சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பதையும் தடுக்க பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு சாக்லேட் கண்டிப்பா சாப்பிடலாம்!! அது என்ன தெரியுமா? 

Chicken and Diabetes

சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கன் நல்லதா?

நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கன் ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் லீன் என்ற புரதம் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. மேலும் இது அவர்களது பசியை கட்டுப்படுத்தவும், திருப்தி அடையச் செய்யவும் உதவுகிறது. குறிப்பாக சிக்கனை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் உடலில் ரத்தத்தின் அளவு உயராமல் தடுக்கப்படும். 

சிக்கனில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஆகவே, சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடுவதினால் கார்போஹைட்ரேட் மட்டும் சர்க்கரை உள்ள உணவுகள் மீதான விருப்பம் குறையும். அதுபோல சர்க்கரை நோயாளி சிலர் உடல் எடையால் பாதிக்கப்பட்டிருந்தால் சிக்கன் அவர்களது எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. காரணம் இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது.

Chicken and Diabetes

எப்படி சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகளுக்கு க்ரில்லிங் சிக்கன் அல்லது பேக்கிங் செய்த சிக்கன் நல்லது. இப்படி சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, எலும்பு மற்றும் தோல் இல்லாத சிக்கனை சாப்பிடுவது இன்னும் நல்லதாக கருதப்படுகிறது. ஏனெனில், இவற்றில் தான் கொழுப்பு குறைவாக இருக்கும் மற்றும் அவை இதய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும்.

கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் கபாப், சிக்கன் புலாவ், சிக்கன் கட்லெட் இது போன்ற பல வகைகளில் சர்க்கரை நோயாளிகள் சிக்கனை செய்து சாப்பிடலாம்.

நினைவில் கொள் :

சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கன் ஆரோக்கியமாக கருதப்பட்டாலும் சமைக்கும் முறையில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில், சமைக்கும் முறையில் கலோரிகள் கூடவும் ஆரோக்கியமற்ற கொழுப்பு சேரவும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

வறுத்த மற்றும் எண்ணெயில் பொரித்த சிக்கனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். மேலும் சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்யும் சாப்பிட கூடாது.

click me!