வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உதாரணமாக, செரிமானத்திற்கு குடல் இயக்கத்திற்கு, ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு இதன் நன்மைகள் பல. அதுபோல் நம் உடலில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினைகளான கண் அரிப்பு, தொண்டை அரிப்பு, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வெங்காயம் உதவுகிறது.