தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணமா? உண்மையான காரணம் இங்கே..!!

Published : Aug 23, 2023, 06:23 PM ISTUpdated : Aug 23, 2023, 06:27 PM IST

ஒருவருடைய தலையில் இரட்டை சுழி இருந்தால் அது மரபணு காரணம் என்று அறிவியல் கூறுகிறது.

PREV
14
தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணமா? உண்மையான காரணம் இங்கே..!!

பொதுவாகவே ஒருவருக்கு தலையில் இரட்டை சுழி இருந்தால் கிண்டல் செய்வது உண்டு. அதுவும் ஆண்களுக்கு இருந்தால் சொல்லவே வேண்டாம். ஏனெனில், இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று சொல்வதுண்டு. குறிப்பாக இப்படி சொல்வதை நாம்  அதிகமாக கிராமங்களில் கேட்க முடியும். அந்தவகையில், இது உண்மையா?  மற்றும் இதற்கு பின்னால் ஏதேனும்  அறிவியல் காரணங்கள் உண்டா? என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

24

பொதுவாகவே இந்த இரட்டை சுழி ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். அதன்படி, ஆய்வு ஒன்றில், உலகளவில் 5% பேருக்குத்தான் இந்த இரட்டை சுழி இருப்பதாகக் தெரிவித்துள்ளது. உண்மையில், ஒருவருடைய தலையில் இரட்டை சுழி இருந்தால் அது மரபணு காரணம் என்று அறிவியல் கூறுகிறது. சொல்லப்போனால் அவர்களது முன்னோர்களுக்கு இரட்டை சுழி இருந்தால், இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நீரிழிவு நோய்க்கு உடல் எடையை குறைப்பதே ஒரே தீர்வு? கட்டுக்கதைகளும் உண்மையும்..

34

அதுபோல் கிராமப்புறங்களில், இப்படி இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் அல்லது முதலில் நிச்சயம் நடந்த பின், திருமணம் வரை சென்றிருக்காது. அதன் பின் இரண்டாவதாக மீண்டும் நிச்சயிக்கப்பட்டு அது திருமணத்தில் முடியும். இதற்கு இந்த சுழிதான் காரணம் என்று கூறுவர். ஆனால் இதுவரை இது உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை.
 

44

மேலும் ஒருவருக்கு இப்படி இரட்டை சுழி இருந்தால் சில நல்ல குணங்களை கொண்டவராக இருப்பார் என்று ஜோதிடம் கூறுகிறது. உதாரணமாக, பொறுமையானவர், அன்பானவர், உதவி செய்பவர் என இதுபோன்ற குணங்களைக் கொண்டிருப்பார்கள்.

இதையும் படிங்க: Weight Loss : நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? கட்டுக்கதைகளும் உண்மையும்..

Read more Photos on
click me!

Recommended Stories