நீங்கள் தனியாக பயணம் செய்ய விரும்பும் அதே நேரம் பாதுகாப்பான பயணத்தை நாடினால், IRCTC டூர் பேக்கேஜ்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பேக்கேஜ்கள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, ஹோட்டல் ஏற்பாடுகள் முதல் சுற்றிப் பார்ப்பது வரை பயணத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பேக்கேஜ் மன அமைதியுடன் புதிய இடங்களை ஆராய முடியும். பெண்களுக்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வடிவமைக்கப்பட்ட சில டூர் பேக்கேஜ்கள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.
டெல்லி டூ அமிர்தசரஸ் டூர் பேக்கேஜ்
கால அளவு: 1 இரவு மற்றும் 2 நாட்கள்
புறப்படும் தேதி: ஆகஸ்ட் 30
செலவு: தனியாகப் பயணிப்பவர்களுக்கு ரூ.13,980, துணையுடன் பயணம் செய்பவர்களுக்கு ரூ.8,810.
ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடங்கள், சுற்றி பார்க்க மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
ஐதராபாத்தில் இருந்து வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் டூர் பேக்கேஜ்
காலம்: 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள்
தொடக்க தேதி: 22 செப்டம்பர்
செலவு: தனியாக பயணிப்பவர்களுக்கு ரூ.21,490, துணையுடன் பயணம் செய்பவர்களுக்கு ரூ.16,480.
ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடங்கள், சுற்றிப் பார்ப்பது மற்றும் சாப்பாட்டு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
லக்னோவிலிருந்து சிரபுஞ்சி, குவஹாத்தி, காமாக்யா மற்றும் ஷில்லாங் டூர் பேக்கேஜ்
காலம்: 10 இரவுகள் மற்றும் 11 நாட்கள்
தொடக்க தேதி: ஆகஸ்ட் 26
செலவு: தனியாகப் பயணிப்பவர்களுக்கு ரூ.83,825, துணையுடன் பயணம் செய்பவர்களுக்கு ரூ.46,500.
ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடங்கள், சுற்றிப் பார்ப்பது மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
உங்கள் பயணங்களில் மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு இரண்டையும் நீங்கள் விரும்பினால், இந்த IRCTC டூர் பேக்கேஜ்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதிகாரப்பூர்வ IRCTC இணையதளத்தில் நேரடியாக இந்தப் பேக்கேஜ்களை முன்பதிவு செய்யலாம்.