இந்தியாவின் பிரபலமான மலைவாசஸ்தலமான ஊட்டிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய அம்சம் ஊட்டி மலை ரயில் பயணம். சென்னையில் இருந்து ஊட்டிக்கு செல்ல, ஐஆர்சிடிசி சிறப்பு டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி இந்தியாவின் மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகஃ உள்ளது. அழகிய மலைகள், நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் குளிர்ச்சியான காலநிலை, பனிபோர்வை போன்ற புல்வெளிகள் உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர்.
கோடை விடுமுறை மட்டுமின்றி, தொடர் விடுமுறைகள், பண்டிகை காலங்கள் என்றாலே பலரின் நினைவுக்கு வரும் இடங்களில் ஊட்டியும் ஒன்று.
25
Chennai - Ooty Irctc Tour Package
கடல் மட்டத்திலிருந்து 2,240 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய மற்றொரு விஷயம் என்றால் அது ஊட்டி மலை ரயில் பயணம். ஊட்டிக்கு செல்பவர்கள் ஒருமுறையாவது ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இது கோயம்புத்தூருக்கு வடமேற்கே 86 கிமீ (53 மைல்) தொலைவிலும், மைசூருக்கு தெற்கே 128 கிமீ (80 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும் ஊட்டி உள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்த போது மெட்ராஸ் மாகாணத்தின் கோடைகால தலைநகரமாக ஊட்டி இருந்தது.
தோடா இன மக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஊட்டி 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் வந்தது. ஊட்டியின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, மருந்து தயாரிப்பு மற்றும் போட்டோ மற்றும் படிப்பிடிப்புகள் ஆகியவை அதிகம் நடைபெறுகிறது.
இந்த நகரம் நீலகிரி காட் சாலைகள் மற்றும் நீலகிரி மலை ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஊட்டியின் இயற்கையான சூழல் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. 2011 இல், நகரத்தின் மக்கள் தொகை 88,430 ஆகும்.
45
Chennai - Ooty Irctc Tour Package
இந்திய ரயில்வே நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சிறப்பு டூர் பேக்கேஜ்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து ஊட்டிக்கு செல்ல, ஊட்டி - முதுமலை பேக்கேஜ் என்ற பெயரில் டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. இந்த ரயில் பயணத்தில் ஊட்டி - முதுமலை - குன்னூர் ஆகிய இடங்களை இந்த சுற்றுலாவில் கண்டுகளிக்கலாம்.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று இரவு 9.05 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் புறப்படும். இந்த டூர் பேக்கேஜில் பயணிகள் ஸ்லீப்பர் வகுப்பு ரயிலில் அழைத்து செல்லப்படுவார்கள் விநாயக இன் /ப்ரீத்தி கிளாசிக் ஆகிய ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள். 4 இரவுகள்,5 நாட்களை உள்ளடக்கிய இந்த டூர் பேக்கேஜின் விலை ரூ.8,800-ல் இருந்து தொடங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று இந்த பேக்கேஜின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.