கடைசியா உங்க டூத் பிரஷை எப்போ மாத்துனீங்கனு நியாபகம் இருக்கா? மறக்காம இதை தெரிஞசிக்கோங்க

First Published | Sep 20, 2024, 4:59 PM IST

கடைசியாக உங்கள் டூத் பிரஷை எப்போது மாற்றினீர்கள் என்பது நியாபகம் உள்ளதா? நியாபகத்தில் வைக்க முடியாத அளவிற்கு பல மாதங்கள் ஆகிவிட்டதென்றால் இந்த செய்தி உங்களுக்கானது தான். டூத் பிரஷை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

Tooth Brush

தமிழகத்தில் பெரும்பாலும் காலைப் பொழுதில் மட்டும் பல் துலக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் சிலர் காலை, இரவு என இரு வேளைகளில் பல் துலக்குகின்றனர். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பற்கலில் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படுகிறது. நமது பற்களின் பாதுகாவலனாக விலங்கும் டூத் பிரஷை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா? 

Tooth Brush

நம்மில் பலரும் பல மாதங்களாக டூத் பிரஷை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஒருசிலர் கடைசியாக என்று பிரஷை எப்போது மாற்றினோம் என்பதே மறந்து போகும் அளவிற்கு வருடம் கடந்து ஒரே பிரஷை பயன்படுத்துகின்றனர்.

Tap to resize

Dental Tips

பொதுவாக ஒரு டூத் பிரஷை 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துறைக்கின்றனர். பற்களில் சேரும் கிருமி, உணவு துகள்களை அகற்றும் பணியில் பிரஷ் ஈடுபடுகிறது. ஆனால் ஒரு பிரஷ்க்கு 3 மாதத்திற்கு மட்டுமே இந்த சக்தி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால் 2 முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே டூத் பிரஷ்சை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர்.

Dental Tips

அதனை மீறி ஒரே பிரஷ்ஐ பயன்படுத்துவதால் உணவு துகள்கள் நீக்கப்படலாம் ஆனால் கிருமி விரட்டப்படுவது கேள்விக்குறி தான் என்கின்றனர். மேலும் நமது உடலில் ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த நோய் குணமானவுடன் டூத் பிரஷை மாற்றி விடவேண்டுமாம். அப்படி செய்தால் கிருமி தொடர்ந்து நமது உடலை தாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

Tooth Brush

அடிக்கடி கடைக்கு சென்று பிரஷ் வாங்குவதற்கு பதிலாக மொத்தமாக பிரஷ்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அப்படி செய்தால் உங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, பிரஷ்ன் வாழ்நாள் காலாவதியானாலோ அவற்றை உடனே மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்.

Latest Videos

click me!