India's Most Unhygienic Trains
ஆசியாவின் 2-வது பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே திகழ்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். எனினும் இந்திய இரயில்வே தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது, ஆனால் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல சவால்கள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் தூய்மையை கேள்விக்குறியாக்குகின்றன.
India's Most Diritest Trains
இதனால் இந்தியாவில் சில ரயில் நிலையங்களும், ரயில்களும் மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. இந்த ரயில்களில் அசுத்தம் மற்றும் துர்நாற்றம் வீசி வருவதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பலமுறை புகார் தெரிவித்தும், நிலைமை மாறாமல் உள்ளது.
Most Diritest Indian Railway
நாடு முழுவதும் உள்ள பல்வேறு வழித்தடங்களை உள்ளடக்கிய சில அசுத்தமான ரயில்களின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பயணிகளின் அனுபவங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
Train
பீகார் மற்றும் பஞ்சாபை இணைக்கும் முக்கிய ரயிலான சஹர்சா-அமிர்தசரஸ் கரிப் ரத் ரயில் நாட்டின் அழுக்கு ரயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ரயிலின் தூய்மை குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன.
Train
சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ்
இந்த ரயில் புது தில்லியில் உள்ள ஆனந்த் விஹார் முதல் பீகாரின் ஜோக்பானி வரை இயக்கப்படுகிறது. ஜோக்பானியில் இருந்து புறப்படும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸில் சுகாதார சீர்கேடு குறித்து 67 புகார்கள் வந்துள்ளன. எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Train
ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ்
ஜம்முவில் உள்ள ஸ்ரீ வைஷ்ணோ தேவியிலிருந்து மும்பையின் பாந்த்ரா வரை இயக்கப்படும் இந்த விரைவு வண்டி நாட்டின் அசுத்தமான ரயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ரயிலின் அசுத்தம் தொடர்பாக இதுவரை 64 புகார்கள் வந்தன,
Train
திரிபுரா சுந்தரி எக்ஸ்பிரஸ்
இந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் இருந்து பஞ்சாபில் உள்ள ஃபிரோஸ்பூருக்கு செல்கிறது. ஃபிரோஸ்பூரில் தொடங்கும் ரயிலில் கடந்த 2022-ம் ஆண்டில் தூய்மை இல்லாதது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இந்த ரயிலின் அசுத்தம் தொடர்பாக இதுவரை 57 புகார்கள் வந்துள்ளன.
Train
ஜெய்நகர்-அமிர்தசரஸ் குளோன் சிறப்பு
நாட்டின் அசுத்தமான ரயில்களில் இந்த ரயிலும் ஒன்றாகும். டிசம்பரில் இந்த ரயிலின் அசுத்தம் தொடர்பாக வந்த 50 புகார்கள் அழுக்காக உள்ளது.