ஹூலாக், கிப்பன்களில் இரண்டாவது பெரிய இனமாகும். கிப்பன்களில் மிகப்பெரிய இனம் சியாமங். உலகம் முழுவதும் 20 வகையான கிப்பன்கள் உள்ளன.
ஹூலாக்கின் அளவு அதிகபட்சமாக 60 முதல் 70 சென்டிமீட்டர் வரை இருக்கும். எடை சுமார் 6 முதல் 9 கிலோகிராம் வரை இருக்கும். ஹூலாக் சுமார் 12000 எண்ணிக்கையில் உள்ளன.
ஆண் ஹூலாக் கருப்பு நிறத்திலும், புருவங்கள் வெண்மையாகவும் இருக்கும், பெண் குரங்குகள் பழுப்பு நிற ரோமங்களைக் கொண்டிருக்கும். ஹூலாக் என்பது அசாமிய மொழியில் இருந்து வந்த சொல்.
வடகிழக்கு இந்தியாவில், பிரம்மபுத்திரா நதியின் தெற்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளிலும், திபாங் நதிகளின் கிழக்கிலும் ஹூலாக் காணப்படுகிறது. இது அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன.
ஹூலாக், ஹோலோங்கபார் கிப்பன் சரணாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இது மோரன் பழங்குடி சமூகத்தினருடன் மிகவும் நட்புடன் உள்ளது மற்றும் அவர்களின் பாதுகாப்பிலும் வாழ்கிறது. வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் இந்த குரங்குகள், மோரன் பழங்குடி சமூகத்துடன் ஒரு சிறப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.