
நாம் அனைவரும் கண்டிப்பாக ரயிலில் பயணித்திருப்போம். இந்திய ரயில்வே என்பது ஆசியாவின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்காகவும் உலகின் 4-வது பெரிய இரயில்வே நெட்வொர்க்காகவும் இந்திய ரயில்வே உள்ளது.
சுமார் 68,000 கி.மீ-க்கு மேல் ரயில் பாதைகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதில் 45,000க்கும் கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ரயில் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி உலகளவில் அரசாங்கத்தால் இயக்கப்படும் ஒரே ரயில்வே என்றால் அது இந்திய ரயில்வே தான். வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 4உலக பாரம்பரிய தளங்களை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. அவை டார்ஜிலிங் இமயமலை இரயில்வே, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை, நீலகிரி மலை இரயில் மற்றும் கல்கா சிம்லா இரயில் ஆகியவை ஆகும்.
ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், பேலஸ் ஆன் வீல்ஸ், தி கோல்டன் தேர், தி மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் தி டெக்கான் ஒடிஸி என்ற 5 ராயல் ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. இதில், பேலஸ் ஆன் வீல்ஸ் பழமையான ஆடம்பர ரயில் ஆகும். ஆனால், இந்த ரயில்களின் கட்டணம் சாதாரண ரயில் கட்டணத்தை விட பன்மடங்கு அதிகம் என்பதால் இந்த ராயல் ரயில்களில் அனைவரும் பயணிக்க முடியாது.
இந்தியாவில் ரயில்வேயில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் பணிபுரிகின்றனர். இந்த நேரடி வேலைவாய்ப்பு தவிர, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் பலர் இரயில்வே என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாராத்திற்கு உதவுகிறது.
ரயில் சேவைகளை வழங்கும் இ-கேட்டரிங் மற்றும் ரயில் பயன்பாடுகளும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இப்படி இந்திய ரயில்வே பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பல உள்ளன. அப்படி மற்றொரு சுவாரஸ்யமான தகவல் பற்றி பார்க்கலாம்.
அதாவது இந்தியாவில் மொத்தம் 7,335 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில், "புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு தனிச்சிறப்பை கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையப் பெயர் கொண்ட ரயில் நிலையம் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
ஆம். இதற்கு முன்பு மெட்ராஸ் சென்ட்ரல் என்றும் பின்னர் சென்னை சென்ட்ரல் என்றும் அழைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தின் பெயர் 2019-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன்படி, இந்த ரயில் நிலையம் தற்போது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து, சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ரயில் நிலையம் பற்றிய சில சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்துள்ளது. சென்னையில் உள்ள இந்த ரயில் நிலையம், இந்தியாவின் மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 57 எழுத்துக்களைக் கொண்டுள்ளதால் இது நீளமனா பெயரை கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரி. உலகிலேயே நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஐரோப்பிய நாடான வேல்ஸ் நாட்டில் உள்ள ஒரு ரயில் நிலையம் மிகவும் நீளமான பெயரை கொண்டுள்ளது.
Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwlllantysiliogogogoch.என்பது அதன் பெயர். 58 எழுத்துக்கள் கொண்ட இந்த ரயில் புகழ்பெற்று நிற்கும் இந்த நிலையம், மிக நீளமான ஸ்டேஷன் பெயரை மட்டுமல்லாமல், ஐரோப்பா மட்டுமின்றி உலகின் மிக நீளமான இடப் பெயரையும் கொண்டுள்ளது.