
கொரோனா தொற்றுநோயின்பதிப்புகளில் உலகம் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், இப்போதுஅடுத்த அதிரடியாக மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற 50க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
குரங்கு அம்மை எப்படி பரவுகிறது..?
குரங்கு அம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு தொற்று நோயாகும். பாதிக்கப்பட்ட குரங்கு, எலி, அணில் போன்ற விலங்குகளிடன் நபர் தொடர்பு கொள்ளும்போது, அவருக்கு எளிதில் இந்த நோய் பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட நபரின் படுக்கை, காயங்கள், உடல் திரவங்கள் மற்றும் வாயில் உள்ள நீர்த்துளிகள் மூலம் மற்றவருக்கு பரவுகிறது.
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு:
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர். இவர்கள் துபாய் நாட்டிலிருந்து திரும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நோயாளியின் மாதிரிகள் முன்னர் தேசிய வைராலஜி நிறுவனத்தில் பரிசோதிக்கப்பட்டது. அங்கு நோய் உறுதி செய்யப்பட்டது. தற்போது நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள்:
இந்த குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த அறிகுறிகள் தென்பட 5-13 நாட்கள் ஆகும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்..அந்த இடைப்பட்ட காலத்திற்குள் நோய் தாக்க துவங்கி காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, உடலில் குளிர்ச்சி, சோர்வு, வீங்கிய நிணநீர் கணுக்கள் சளி, வியர்வை ஆற்றல் இழப்பு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் ஒவ்வொன்றாக தோன்றுமாம். எனவே, அதுவரை அவருடைய உபகாரணங்களை பயன்படுத்தியவர்களுக்கு, அவருடன் தொடர்பில் இருக்கும் நபருக்கு இந்த நோய் பரவும் அபாயம் உள்ளதாம்.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த அறிகுறிகள் தோன்றிய பிறகு, அவரது முகத்தில் தடிப்புகள் தோன்ற ஆரம்பித்து, படிப்படியாக அவை உடல் முழுவதும் பரவுகின்றன. முதலில் இந்த தடிப்புகள் லேசானவையாகவும், பின்னர் கருமையாகவும் மாறும். சொறி பெரிய பருக்கள் போல இருக்கும். இவை படிப்படியாக வளர்ந்து பின்னர் விழும். நோய் 2-4 வாரங்கள் நீடிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, தோல் வெடிப்புகள் அல்லது கொப்புளங்கள் உள்ளிட்ட மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றிய உடன் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
குரங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?
இது குறித்து தொற்று நோய்களுக்கான மருத்துவ ஆலோசகர் டாக்டர் ப்ருது நரேந்திர தேகனே கூறுகையில், “குரங்கு பாக்ஸ் அறிகுறிகள் பெரியம்மையைப் போலவே இருந்தாலும், பெரும்பாலான நிகழ்வுகள் லேசானவை மற்றும் கட்டுப்படுத்த கூடியவை.பொதுவாக இந்த குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த அறிகுறிகள் தென்பட 5-13 நாட்கள் ஆகும். மேலும் 2-4 வாரங்கள் நீடிக்கும். விரைவாக குணமடைய சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்த நோய்க்கு இன்னும் பிரத்யேக மருந்து இல்லை. அதன் சிகிச்சையில் பெரியம்மை தடுப்பூசி, வைரஸ் தடுப்பு மற்றும் விஐஜி பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து போதுமான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவிட் நோய்க்கு எதிராகப் பாதுகாப்பதற்காக சமூக இடைவெளி பேணப்பட்டது போலவே இதிலும் செய்யப்பட வேண்டும். அடிக்கடி கைகளை கழுவவும். கழுவாத கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடாதீர்கள். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்கள், குறிப்பாக குரங்குப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கடந்த 21 நாட்களில் சந்தேகத்திற்குரிய நபருடன் தொடர்பு கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும்'' நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.