பொதுவாக இரும்பு கடாய், இரும்பு தோசைக்கல் போன்ற இரும்பு சார்ந்த பாத்திரங்கள் அடிக்கடி தண்ணீரில் கழுவுவதால் ரொம்ப எளிதாக துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். இதை நீண்ட நாட்கள் அப்படியே கிடப்பில் போட்டு வைத்து விட்டால் ரொம்பவும் மோசமாக துருப்பிடித்திருக்கும். உடனே அதனை அப்புற படுத்திவிட்டு எளிமையாக பயன்படுத்த கூடிய நான்ஸ்டிக் தவா வாங்குவீர்கள். என்றைக்காவது யோசித்தது உண்டா? இதுவரை எத்தனை தவாவை வாங்கி இருப்பீர்கள், எத்தனை தவாவை தூக்கி எறிந்து இருப்பீர்கள். ஆனால் இரும்பு தோசை கல் எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வருடம் ஆனாலும் சரி அப்படியே இருக்கும்.
மேலும் படிக்க....கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...
இரும்பு தோசை கல்லில் தோசை சுடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாகும். எனவே, இரும்பு தோசை கல்லை எப்படி பராமரிப்பது? புதியதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால், அதை ஒரே நாளில் துரு நீக்கி, சுத்தம் செய்வது எப்படி? உங்கள் வீட்டில் நீண்ட நாள் பழைய இரும்பு தோசைக்கல் அதிகமாக துருப்பிடித்து, கருப்பு பிடித்திருந்தால், அதை சுத்தம் செய்வது எப்படி? என்பதற்கான சுலபமான வழிமுறைகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
1. முதலில், துருப்பிடித்த அந்தக் கல்லை, எடுத்து அடுப்பின் மீது வைத்து நன்றாகக் காயவிடுங்கள். அதிலிருந்து அப்படியே புகை கிளம்பும், அவ் அளவிற்கு காய வைக்க வேண்டும். இடுக்கியோ, பிடி துணியோ, கட்டாயம் கையில் இருக்க வேண்டும்.
2. தோசை கல் நன்கு காய்ந்ததும் குறைந்த தீயில் அடுப்பை மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை எடுத்து அதன் மீது தூவுங்கள். பின்னர் ஒரு மூடி எலுமிச்சை பழத்தை முழுதாக பிழிந்து கொள்ளுங்கள்.
5. அதன் பிறகு சமையல் எண்ணெயை நன்கு எல்லா இடங்களிலும் தடவி, அரிசி வடித்த கஞ்சி தண்ணியை ஊற்ற 24 மணிநேரம் ஊற வைத்து விடுங்கள். பின்பு, மீண்டும் மறுநாள் நன்றாக கழுவி வைத்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க....கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...
6. நீங்கள் தோசை ஊற்றுவதற்கு முன்பு பாதி அளவு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக நறுக்கி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு அனைத்து இடங்களும் படும்படியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் மொத்த துரு கரையும் நீங்கி விடும். தோசை கல் புத்தம் புதியதாக மாறிவிடும். பின்னர், இதில் தோசை சுட்டு பாருங்கள் ஹோட்டல் மாஸ்டர் தோற்று போகும் அளவிற்கு மொறு மொறு தோசை சுட முடியும்.