தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம். சில வகை தானங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் என்பது மத நம்பிக்கை. நம்முடைய முன்னோர்களால், தானம் என்றால் சுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள். அசுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள் என்று வரையறையோடு தானம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க..கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...
ஆடி அமாவாசை, சிரார்த்தம், கிரகணம் போன்ற விசேஷ நாட்களில் தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வரிசையில், இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. அந்த நாட்களில் ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு ஆகும். எனவே, ஆடி அமாவாசை நாளில் நீங்கள் எந்த பொருட்களை தானம் செய்வது உங்களின் வாழ்க்கையை பிரகாசிக்கும் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.