நீரிழிவு நோய்க்கு ஆரோக்கியமான உணவு, பழங்களை சாப்பிடுவது நல்லது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆனால், நீரிழிவு நோயாளிகள் எந்த பழத்தை சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற குழப்பம் இருக்கும். அந்த வகையில், ‘நாவல் பழம்’ நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும், இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், துத்தநாகம், புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளுடன் கால்சியம், வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகவும் உள்ளது.