Orange Juice
ஆரஞ்சு பழம் கவும் மலிவாக கிடைக்கக்கூடிய ஒரு பழம் ஆகும். இதில், வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இருப்பினும், ஆரஞ்சு பழம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, உடல் எடை குறைப்பு போன்ற பல்வேறு நன்மைகளை கொடுக்கும். இருப்பினும், குறிப்பிட்ட சில உடல் உபாதைகள் இருப்பவர்கள் இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எனவே யாரெல்லாம் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே காண்போம்.
கேவிட்டி பிரச்சனை இருந்தால்:
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. இது பற்களின் எனாமலில் உள்ள கால்சியத்துடன் கலந்தால், பாக்டீரியா தொற்று ஏற்படலாம். துவாரம் இருக்கும் போது ஆரஞ்சு சாப்பிட்டால் பற்கள் கெட்டுவிடும். ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால், வலுவான பற்களைப் பெறலாம்.