
இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது என்பது சவாலுக்கு குறைவானது அல்ல என்று சொல்லலாம். சரியான வாழ்க்கை முறை, சீரான உணவு பழக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றுவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதே சமயம் கவனக்குறைவாக இருந்தால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
மேலும் இவற்றை பின்பற்றாததால் பல நோய்கள் ஏற்படுகின்றனர். அதன் பிறகு மருத்துவர் தான் சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க நீங்கள் உங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அதேசமயம் நோய் வராமல் இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இருப்பினும் சிலருக்கு போதுமான நேரம் இல்லாததால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகிறது. உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் இல்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க விரும்பினால், தினமும் காலை எழுந்தவுடன் சைக்கிள் ஓட்டுங்கள்.
ஆம், சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். வழக்கமான சைக்கிள் ஓட்டுதல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது தவிர சைக்கிள் ஓட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் 30 நிமிடம் வாக்கிங் போனா.. நீங்க கற்பனை செய்ய முடியாத நன்மைகள்!!
தினமும் காலை சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் :
1. எடையை கட்டுப்படுத்தும்
தினமும் காலை சைக்கிள் ஓட்டும் வந்தால் எடை அதிகரிப்பை சுலபமாக கட்டுப்படுத்த முடியும். சைக்கிள் ஓட்டுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதற்கு கண்டிப்பாக தினமும் சைக்கிள் ஓட்ட வேண்டும் தொடர்ந்து 6 மாதங்கள் தினமும் காலை சைக்கிள் ஓட்டில் வந்தால் அதிகரித்து வரும் எடையை 12 சதவீதம் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.
2. சர்க்கரையை கட்டுப்படுத்தும்
நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தினமும் காலை சைக்கிள் ஓட்டுதல் உதவியாக இருக்கும். தினமும் சுமார் 45 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது சர்க்கரை கட்டுப்படுத்த உதவும் என ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெறும் 20 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் இத்தனை நன்மையா! தினமும் ஒரு ரெய்டு போகலாமே!!
3. மன அழுத்தத்தை குறைக்கும்
நிபுணர்களின் கூற்றுப்படி சைக்கிள் ஓட்டுதல் மன அழுத்தத்தை வெளியிட்டது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் இருந்து விடுபட நீங்கள் விரும்பினால் தினமும் சைக்கிள் ஓட்டுங்கள். இது உங்கள் மனநிலையை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது
4. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியம் மேம்படும்
தினமும் காலையில் சைக்கிள் ஓட்டுவது உங்கள் இதை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சைக்கிள் ஓட்டுதல் இதய தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் இதய துடிப்பை மேம்படுத்துகிறது. இது தவிர காலையில் சைக்கிள் ஓட்டுவது மூளையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
5. தசைகள் மற்றும் மூட்டுகள் வலுவடையும்
தினமும் காலை சைக்கிள் ஓட்டுவது தசைகளை வலுவாகும். இது தவிர சைக்கிள் ஓட்டும் போதும் முழங்கால் மூட்டுகளில் அசைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் வயதாகும் போது கூட மூட்டு வலியில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
6. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
நீங்கள் தினமும் காலை சைக்கிள் ஓட்டினால் அதனால் உங்கள் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் வேகமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது உடலில் ஆக்சிஜனின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது கலோரிகள் எரிக்க உதவுகிறது மட்டுமல்லாமல் முழு உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.