தினமும் தூங்கமுடியாம அவஸ்தையா? இதை செய்தால் குழந்தைங்க மாதிரி செம்ம தூக்கம் வரும்.. மூளை சுறுசுறுப்பா மாறும்..

First Published | Mar 7, 2023, 5:04 PM IST

மன அழுத்தத்தின் காரணமாக தூக்கம் வராமல் புரளும் நபர்களுக்கு எளிய தீர்வு..

இன்றைய பிஸியான நாட்களில் தூக்கமின்மை பொதுவான பிரச்சனை. எவ்வளவோ முயற்சி செய்தும் சிலருக்கு இரவு தூக்கம் வருவதில்லை. இரவில் போதுமான தூக்கமின்மை அடுத்த நாளை முழுவதும் பாதிக்கிறது. நீண்ட நாட்களாக இரவில் சரியாக தூங்க முடியாவிட்டால், மன உளைச்சல், பதட்டம் அதிகமாகும். 

இரவில் போதுமான தூக்கம் வரவில்லை என்றால், அது நமது மூளையின் அறிவாற்றல் திறனை மழுங்கடிக்கிறது. நாள் முழுவதும் கற்றுக்கொண்ட விஷயங்கள் சரியாக நினைவு வைக்க முடியாமல் சிரமப்படுவோம். உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் ஆகிய பிரச்னைகள் கூட வரலாம். 

Tap to resize

இந்த பிரச்சனைகளில் இருந்து தப்ப நினைவாற்றல் தியானம் செய்யலாம். முதலில் பாயில் அல்லது பெட்டில் வசதியாக படுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கண்களை மூடிக்கொண்டு உங்களை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். இப்போது உங்களுடைய உடலை ஒரு ஸ்கேனர் போல நினைத்து கொள்ளுங்கள். கைகள், மார்பு, இடுப்பு, முழங்கால்கள், கால்விரல்கள் வரை ஒவ்வொரு பகுதியாக நுட்பமாக உணருங்கள். பின்னர் தலைகீழாக அதாவது கால்விரல்களிலிருந்து தலை வரை நினைத்து பாருங்கள். 

இந்த முறையை 5 முதல் 6 முறை செய்யவும். இதனால் நல்ல தூக்கத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். இதை தவிர மற்றொரு முறைமுறை உள்ளது. படுக்கையில் 10 முறை மூச்சை ஆழமாக இழுத்து வெளியிடுங்கள். இதனால் மனம் அமைதியடைந்து இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தலாம். 

இதையும் படிங்க: டூவீலர் ஓட்டுவதால் பின்னியெடுக்கும் முதுகுவலி.. எப்படி சமாளிப்பது?

சிறந்த தூக்கத்தைப் பெற உதவும் ஒரு சீன முறையை தெரிந்து கொள்ளுங்கள். படுத்தபடி, காதுகளுக்கு பின்னால் உள்ள எலும்புகளை விரல்களால் அழுத்தவும். இந்த புள்ளிகளை அழுத்துவதன் மூலம், இரவில் தூக்கமின்மையையும் குணப்படுத்த முடியும்.  

இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்களுக்கு பிடித்தமான அல்லது உங்களோடு இருக்கும் ஒருவரைக் கட்டிப்பிடித்தால், அது உடலில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால் கவலையை உருவாக்கும் ஹார்மோன் 'கார்டிசோல்' கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருவேளை உடன் யாரும் இல்லை.. தனியாக இருக்கிறீர்கள் என்றால் தலையணையை இறுகக் கட்டிக் கொண்டு தூங்கலாம். 

இதையும் படிங்க: அம்மாவின் காதல்.. 'அந்த காட்சியை' நேரில் கண்டு பதறிய மகன்... சின்ன வயதிலும் நிதானமாக யோசித்து எடுத்த முடிவு..!

Latest Videos

click me!