இயற்கையான முறையில் ஹோலி நிறங்களை அகற்ற 5 வழிகள்..!!

Published : Mar 07, 2023, 04:02 PM IST

வரும் 8-ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக உற்சாகமாக பல வட மாநிலங்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.  

PREV
16
இயற்கையான முறையில் ஹோலி நிறங்களை அகற்ற 5 வழிகள்..!!

ஹோலி மிகவும் மகிழ்ச்சிகரமான மற்றும் உற்சாகமான பண்டிகையாகும். ஆர்வமிகுதியில் செயற்கை வர்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி பண்டிகையை பலரும் சிறப்பாக கொண்டாடிவிடுவார்கள். ஆனால் அந்த வர்ணம் அவ்வளவு சீக்கரம் உடலை விட்டு போகாது. இதனால் சருமமும் பாதிக்கப்படும். தலை முடியில் இருந்து கால் வரை பூசப்பட்ட அந்த வர்ணங்கள் பல வாரங்கள் கழித்து தான் மெல்ல மெல்ல போகும். அந்த வகையில், உங்கள் தோல் மற்றும் கூந்தலில் இருந்து நிறங்களை அகற்ற 5 குறிப்புகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்

26

சோப்பு வேண்டாம் க்ளென்சர் போதும்

எந்த சோப்பையும் பயன்படுத்த வேண்டாம், மென்மையான க்ளென்சரைத் தேர்ந்தெடுக்கவும். ஹோலி நிறங்களை போக்குவத்து சோப்பு எப்போதுமே பயனளிக்காது. ஒரு மென்மையான க்ளென்சரை தேர்வு செய்து கொள்ளவும். முதலில் வெளியே தெரியும் உடல் பகுதிகளில் மாய்ஸ்சரைசிங் கிரீம் தடவவும். அதை வைத்து நிறங்கள் பெரும்பாலும் வந்துவிடும். அதற்கு பிறகு கிளென்சரை தேய்த்து எடுங்கள். அதை தொடர்ந்து சோப்புப் போட்டு உடலை கழுவுங்கள். ஒருவேளை, இதன்காரணமாக உடலில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால், தேங்காய் தேய்த்தால் போதும். 
 

36

குளிரிந்த நீரில் கழுவுங்கள்

எப்போதும் ஹோலி வண்ணங்களை குளிர்ந்த நீரில் மட்டுமே கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காரணம், சூடான நீரில் ஹோலி வண்ணங்களை உடனடியாக அகற்றுவது இன்னும் கடினமாகிறது. உங்கள் சருமத்தை மீண்டும் மீண்டும் கழுவுவதைத் தவிர்க்கவும். இதனால் சருமம் பெரியளவிலான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். 
 

46

சிகிச்சைகள் தேவையில்லை

ஹோலிக்குப் பிறகு, ஃபேஷியல் செய்துகொள்வது, தலைமுடியை ப்ளீச்சிங் செய்வது அல்லது முடிக்கு வண்ணம் பூசுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். இது  முகத்துக்கு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தப்படுவது போலாகும். ஹோலி கொண்டாடிவுடன் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு பிறகு தான், எந்தவிதமான சிகிச்சை அல்லது ஃபேஷியலை செய்ய வேண்டும். 
 

56

நகங்களுக்கு எலுமிச்சை

நகங்களுக்கு உள்ளே சென்றுவிடக்கூடிய வண்ணங்களை வெளியே எடுப்பது சற்று கடினமானதாகும். அதற்கு, உங்கள் விரல்களை எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் விட்டு ஊற வைக்க வேண்டும். குறைந்தது 10 நிமிடாவது இப்படி செய்ய வேண்டும். இதன்மூலம் எந்தவிதமான வண்ணமாக இருந்தாலும், அவை வெளியே வந்துவிடும். ஹோலி விளையாடுவதற்கு முன் உங்கள் கைகளில் கனமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். அதன்மூலம் சீக்கரமாகவே வண்ணங்கள் வெளியே வந்துவிடும். 

திருமணம் 5 வகைப்படுகிறது- தெரியுமா உங்களுக்கு..?? தெரிந்துகொள்ளுங்கள்..!!

66

கூந்தலில் கழுவும் போது கவனம்

ஹோலி விளையாடிய உடனேயே உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போடுவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, முட்டையின் மஞ்சள் கரு அல்லது தயிர் மாஸ்க்கைப் போட்டு, ஷாம்புக்கு முன் 45 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். இது வண்ணங்களை எளிதாக அகற்றிவிடும். அதேபோன்று கூந்தலுக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தாது. இதன்மூலம் கூந்தல் அல்லது தலைமுடியில் இருக்கும் நிறங்கள் இயற்கையாக முறையில் நீங்கிவிடும்.

click me!

Recommended Stories